வாரிசுதாரர் சான்று வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து நிர்வாக ஆணையரகத்துக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், வாரிசுதாரர் சான்று பெற விரும்புவோர். வட்டாட்சியரிடம் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இறந்த நபர் எந்த இடத்தில் வசித்தாரோ அந்த வசிப்பிடத்திற்கு உள்ளிட்ட பகுதியை சேர்ந்த வட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். வாரிசு சான்றிதழ் என்பது பொதுவான ஆவணம். இதனை சாதி மதம் பார்க்காமல் […]
