சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் உள்ள கூட்டுறவு நகர வங்கியில் உள்ள பெட்டகத்தை ஆய்வு செய்தபோது 2.5 கோடி ரூபாய் அளவிற்கு போலி நகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகளை கண்டறிந்துள்ளோம். முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கூட்டுறவு பயிற்சி நிலையங்கள் அனைத்து ஊர்களிலும் தற்போது உள்ளது. தற்போது எந்த பயிற்சி நிலையங்களையும் இடமாற்றம் செய்யவில்லை. புதிய ரேஷன் […]
