தமிழகத்தில் 10 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்து பொதுத்தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவர்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தேர்வு மையங்கள் அமைக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், இணை இயக்குனர்களுக்கு சுற்றி அறிக்கையை அனுப்பி உள்ளார். அதில், தமிழகத்தில் வருகின்ற மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ள 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு புதிய தேர்வு மையங்கள் அமைப்பது குறித்து பின்வரும் […]
