தமிழகத்தில் உள்ள கலை,அறிவியல் மற்றும் பொலியியல் கல்லூரிகளில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் திறன் சார்ந்த படிப்புகளை அறிமுகம் செய்ய உள்ளது. சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டத்துடன் நான் முதல்வன் விருப்ப தேர்வை எழுத வேண்டும் என கட்டாயமாகப்பட்டது.தற்போது மாணவர்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு தான் திறன் சார்ந்த படிப்புகளை பயின்று வருகிறார்கள். இந்நிலையில் மாணவர்கள் கல்லூரியில் படிக்கும் போதே திறன் சார்ந்த படிப்புகளை கற்றுக் கொள்ளும்படியான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]
