சென்னையில் புதிய காய்ச்சல் பரவுவதால் மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நமது சென்னையில் தற்போது கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சளி, இருமல், காய்ச்சல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்த காய்ச்சலானது குழந்தைகளுக்கு சளி, மற்றும் இருமல் ஆகியவை மூலமாக பரவுகிறது. இந்நிலையில் காய்ச்சல் 2 அல்லது 3 நாட்களில் குறைந்தாலும், இருமல் 2 வாரங்களுக்கு நீடிக்கிறது. […]
