வகுப்பறைகள் மேம்பாட்டிற்காக 7000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 2022 -2023 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டுதொடர் தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் இன்று சட்டப்பேரவை உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிலளித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர் “இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு முதலமைச்சர் சார்பாகவும் அனைத்து எம்எல்ஏக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை […]
