ஐக்கிய அரபு அமீரகம் அதிக சலுகைகளோடு விசா நடைமுறைகளை இன்று நடைமுறைப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், தங்கள் நாட்டிற்கு வரும் பிற நாட்டு மக்களை ஊக்குவிப்பதற்காக பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதில் பத்து வருடங்கள் விரிவுபடுத்தப்பட்ட தங்க விசா திட்டம், திறமை மிகுந்த ஊழியர்களுக்கு ஐந்தாண்டு பசுமை விசா திட்டம் போன்றவை இருக்கிறது. சுற்றுலா விசா வைத்திருப்பவர்கள் மூன்று மாதங்களுக்கு தங்கலாம். கிரீன் விசா உடன் வருபவர்கள் அனுமதி காலாவதியான பிறகும் ஆறு மாதங்களுக்கு தங்க முடியும். […]
