விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த ரூபாய் 2000 தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ரூபாய் 2000 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது 11வது தவணை எப்போது வரும் என்று சுமார் 12 கோடி விவசாயிகள் காத்து உள்ள நிலையில் ஏப்ரல் முதல் வாரத்தில் பணம் கிடைக்கும் என்று தகவல் வந்தது. ஆனால் பணம் இன்னும் வந்து சேரவில்லை. இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட விவசாயிகள் பலர் காத்துள்ளனர். […]
