லக்கிம்பூர் கேரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்த பாரதிய ஜனதா எம். பி. வருண் காந்தி, அந்த கட்சியின் புதிய தேசிய செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் 80 பேர் அடங்கிய புதிய செயற்குழு உறுப்பினர்களின் பெயர்களை கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வெளியிட்டார். இதில் கட்சியின் எம். பி. யான வருண் காந்தி மற்றும் அவரது தாயும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகா காந்தியின் பெயர்கள் […]
