மும்பையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் கார் ஒன்று சில நிமிடங்களில் மூழ்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. மராட்டிய மாநிலத்தில் கடந்த வாரம் முதலே கனமழை பெய்து வருகின்றது. இதனால் மும்பை உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளது. மராட்டிய மாநில தலைநகர் மும்பை மற்றும் கொங்கன் பகுதியில் கடந்த புதன்கிழமை பருவ மழை தொடங்கியது. கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக மும்பையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. தாழ்வான இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்தது. […]
