லடாக் எல்லையில் குளிரால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்காக சூரிய சக்தியில் இயங்கும் கூடாரம் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டின் எல்லையில் நம்மை அந்நிய நாடுகளிடம் இருந்து பாதுகாப்பதற்கு ராணுவ வீரர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள். பெரும்பாலான பகுதிகளில் கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நம் நாட்டிற்காக பாடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் லடாக் எல்லையில் உறைபனி குளிரால் அவதிப்படும் ராணுவ வீரர்களுக்காக மாசு ஏற்படுத்தாத சூரிய சக்தியில் இயங்கும் இதமான கூடாரத்தை ஒருவர் வடிவமைத்துள்ளார். […]
