தாம்பரம் ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் காவல்துறைக்கு சம்பந்தப்பட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டார். அப்பொழுது தாம்பரம், ஆவடியை தலைமையிடமாகக் கொண்டு தனித்தனி புதிய காவல் ஆணையாளர் அலுவலகம் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த இரண்டு பகுதிகளும் சென்னை பெருநகர காவல் ஆணையர் அரசின் கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று தெரிவித்தார். […]
