நாட்டில் புதிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை அமைப்பது குறித்து எவ்வித திட்டமும் இல்லை என்ற மத்திய கல்வி அமைச்சகம் திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு மத்தே கல்வித்துறையின் இணையமைச்சர் சுபாஷ் சர்கார் பதில் அளித்துள்ளார். அதன்படி நாட்டில் புதிய ஐஐடிகளை நிறுவ தற்போதைய சூழலில் எந்தவித திட்டமும் இல்லை. 2014-15 ஆண்டிற்கான பட்ஜெட்டில் ஆந்திர, கேரளா, சத்தீஸ்கர், ஜம்மு காஷ்மீர் மற்றும் கோவா 5 மாநிலங்களில் புதிய ஐஐடிகள் அமைக்கப்படும் என்று […]
