வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக கூடிய நிலை ஏற்பட்டுள்ளதால் ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டு வருகின்றது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் நேற்று காலையில் இருந்து பலத்த சூறாவளி காற்று வீசி வருகின்றது. இந்நிலையில் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, எம்.ஆர்.சத்திரம், அரிச்சல் முனை, பாம்பன் பகுதியில் பயங்கரமான சூறாவளி காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என […]
