கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகிலுள்ள பூட்டேற்றி ஆத்திவிளையில் அருள்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்நிலையில் அருள்மணி நேற்று பூட்டேற்றி பகுதியில் அமைந்துள்ள ஒரு கிறிஸ்துவ ஆலயத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அவருடன் வேறு சில தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அருள்மணி மாலையில் பணியில் இருந்த போது திடீரென மின்சாரம் பாய்ந்து அவரை தூக்கி வீசப்பட்டு உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசாருக்கு தகவல் […]
