தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து கொண்டிருந்த முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கல்லாமொழி பகுதியில் தடையை மீறி புகையிலை பொருட்களை விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஜமால் முகைதீன் என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனைப் பார்த்து காவல்துறையினர் உடனடியாக அவரை கையும், களவுமாக பிடித்து விட்டனர்.அதன் பிறகு காவல்துறையினர் […]
