சட்டவிரோதமாக குளிர்சாதன பெட்டியில் பதுக்கி வைத்திருந்த 20 கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நவாமரத்துப்பட்டியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரெட்டியார்சத்திரம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நவாமரத்துப்பட்டியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு மளிகை கடையில் சோதனை செய்தபோது அங்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது […]
