காரில் புகையிலை பொருட்களை கடத்திய தந்தை மகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அங்கு வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் காரில் பிளாஸ்டிக் காலி பெட்டிகள் இருந்துள்ளன. […]
