புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு கொரோனா மிக எளிதில் பரவக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளது. அதில் “புகைப்பழக்கம் கொண்டவர்கள் கையில் கொரோனா வைரஸ் தொற்றி விட்டால் வாய்க்கு மிக எளிதாக செல்லக்கூடிய வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. புகைப்பிடிக்கும் போது கை விரல்கள் வாய் பகுதியினை அதிகமாக தொடக் கூடிய வாய்ப்பு உள்ளதால், புகைப்பிடிப்பவர்களுக்கு மற்ற நபர்களை விட மிக எளிதில் கொரோனா பரவும். […]
