திருமணமான ஒரு வருடத்தில் கேரளாவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் பல ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த கிரண்குமார் என்பவருக்கும், பெண் மருத்துவர் விஸ்மியா நாயர் என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமணத்திற்கு பெண் வீட்டார் சார்பில் 100 சவரன் நகையும், ஒரு ஏக்கர் நிலமும், ஒரு டொயோட்டா கார் வழங்கப்பட்டது. […]
