நெல்லையில் பெட்ரோல் பங்க் ஒன்றில் ஆயுதங்கள் கொண்டு ஊழியர்களை தாக்கி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லை முருகன் குறிச்சியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க்கில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இரவு 10 மணியுடன் விற்பனையை முடித்துவிட்டு பங்க் அலுவலக அறையில் ஊழியர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். இந்தநிலையில் நடுஇரவில் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்று அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் பங்கில் தூங்கிக்கொண்டிருந்த ஊழியர்களை எழுப்பி கேட்டனர். ஊழியர்கள் மறுக்கவே அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட […]
