தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சித்தார்த், இப்போது கமல்ஹாசனுடன் “இந்தியன்-2” படத்தில் நடித்து வருகிறார். இவர் சமூக அரசியல் குறித்த கருத்துகளை அடிக்கடி சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் மதுரை விமானம் நிலையத்தில் இந்தி தெரியாது என கூறியதால் பாதுகாப்பு அதிகாரிகள் கடுமையாக நடந்து கொண்டதாக சித்தார்த் சொன்னார். இது பற்றி சமூகவலைத்தளத்தில் சித்தார்த் வெளியிட்டுள்ளதாவது “மதுரை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு அதிகாரிகளால் 20 நிமிடங்கள் துன்புறுத்தலுக்குள்ளானேன். வயதான என் பெற்றோர் கொண்டுவந்த பைகளிலிருந்த […]
