உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியில் ஒரு குரங்கு மதுபானக் கடைகளுக்குள் புகுந்து மது பாட்டில்களை திருடுவதாக மதுப் பிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ரேபரேலி மாவட்டத்தில் அச்சல்கஞ்ச் பகுதியில் செயல்பட்டுவரும் மதுபானக்கடையில், மதுவைத் திருடிக்குடிப்பதை அந்த குரங்கு வாடிக்கையாக வைத்து இருப்பதாகவும், துரத்தி சென்றால் கடித்துக் குதறுவதாகவும் மதுப் பிரியர்களும், கடைக்காரர்களும் புகார் கூறியுள்ளனர். இது தொடர்பாக அப்பகுதி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கடைக்காரர்கள் குற்றம்சாட்டுகின்றனர். रायबरेली में बंदर का शराब पीने का […]
