21 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் தஞ்சை பீரங்கி மேடு புதுப்பிக்கப்பட்டு வருகின்றது. உலக பாரம்பரிய சின்னமாக தஞ்சை பெரிய கோவில் இருக்கின்றது. தஞ்சையில் ஆசியாவின் பழமையான நூலகமான தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம், அரண்மனை, கலைக்கூடம், ஆயுத கோபுரம் உள்ளிட்ட பெருமைக்குரிய நினைவுச் சின்னங்கள் இருக்கின்றது. இந்த வரிசையில் ராஜகோபால் பீரங்கியும் ஒன்றாக இருக்கின்றது. இந்த பீரங்கி தஞ்சைக்கு சுற்றுலா வரும் பயணிகள் பார்க்க வேண்டிய ஒன்றாகும். எப்போதும் பீரங்கிகள் வார்ப்பிரும்பால் வார்க்கப்படும். ஆனால் இது […]
