Categories
உலக செய்திகள்

நாளுக்கு நாள் அதிகரிக்கும் தாக்குதல்… உக்ரைனிலிருந்து வெளியேறும் ரஷ்ய ராணுவ குடும்பங்கள்…. அதிகரிக்கும் பீதி…!!!!!!!!

கேப்டன் பகுதியில் உக்ரைன்  நாட்டு ராணுவம் நடத்தி வரும் தொடர் தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து ரஷ்ய இராணுவத்தின் குடும்பங்கள் பீதியில் தப்பித்து ஓடி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றது. அண்டோனிவ்ஸ்கி மற்றும் கவோவ்ஸ்கி பாலங்களை உக்ரைன்  ராணுவம் சில தினங்களாக பலமாக தாக்கி வருகின்றது. இந்த சூழலில் ஆண்டோனிவ்ஸ்கி பாலம் நேற்று இருபுறமும் சூழப்பட்டு உள்ளூர் வாசிகள் அனுமதிக்கப்படாமல் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் இந்த பாலம் ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களுக்கு முக்கிய விநியோக பாதையாக பயன்படுத்தப்பட்டு வந்த […]

Categories
மாநில செய்திகள்

பலத்த சூறைக்காற்று….. “30 அடிக்கு மேல் கடல் சீற்றம்”….. பீதியில் மக்கள்….!!!!

தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் பொதுமக்கள் கடலில் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா பகுதியில் திடீரென்று சூறைக் காற்று வீச தொடங்கியது. இதனால் தனுஷ்கோடி, பாம்பன் மண்டபம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் பாரம்பரிய நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தனுஷ்கோடி பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன் இறங்குதளத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

பப்புவா நியூ கினி… சக்திவாய்ந்த நிலநடுக்கம்… குலுங்கிய கட்டிடங்கள்…பீதியடைந்த மக்கள்…!!!

தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியிலுள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் திடீரென சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர். தென்மேற்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவு நாடான பப்புவா நியூகினியாவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மேற்குப் பகுதியில் இருக்கின்ற நியூ பிரிட்டன் மாகாணத்தின் தலைநகராக திகழும் கிம்பேவை மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது.அது ரிக்டர் அளவுகோலில் 5.5 என பதிவாகியுள்ளது.மேலும் பூமிக்கு அடியில் 59.34 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கொரோனா நோயாளிகள் தப்பியோட்டம்….பீதியில் தூத்துக்குடி மக்கள்..!!

தூத்துக்குடியில் கொரோனா பாதிக்கப்பட்ட இருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சிவத்தையாபுரத்தை  சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த இருவர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு  இருந்தனர். அதன்பின் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த இவர்கள் நேற்று(ஆகஸ்ட் .11) கொரோனா வார்டில் இருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து சுகாதார அலுவலர்கள் காவலர்களிடம் தெரிவித்த பின் கொரோனா பாதிக்கப்பட்ட இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி […]

Categories
உலக செய்திகள்

“ஒலிம்பிக் போட்டி”… ஒத்திவைக்க முடியாது – ஜப்பான் அரசு திட்டவட்டம்..!!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒத்தி வைப்பதை தவிர்க்க முடியாது என்று ஜப்பான் அரசு ஒப்புக்கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 32வது ஒலிம்பிக் போட்டியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது . ஆனால் காட்டுத் தீ போல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பீதியால் பல்வேறு நாடுகள் டோக்கியோ ஒலிம்பிக்கில் கலந்து கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கொரோனோவின்  தாக்கம் காரணமாக […]

Categories

Tech |