கேரளாவில் இன்று 12 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கண்ணூர் மற்றும் காசராகோடு பகுதிகளில் தலா 4, மலப்புரத்தில் 2, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் தலா ஒருவரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார். இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இதுவரை 8 வெளிநாட்டவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதில் சிலர் […]
