தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறது. அந்த வகையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் மற்றும் பீடிஇலை கடத்தலும் அதிகரித்துள்ளது. இதனால் கடலோர பகுதிகளில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அருகே அமைந்துள்ள வேம்பார் கடலோர எல்லைக்குட்பட்ட பெரியசாமிபுரம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து கடலோர பாதுகாப்பு குழும துணை போலீஸ் சுப்பிரண்டு பிரதாபன் உத்தரவின் பெயரில் காவல் படை போலீஸ் […]
