பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நிதிஷ்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு கொண்டிருந்த போது மேடையை நோக்கி வெங்காயம் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் 3 கட்டங்களாக நடந்து கொண்டிருக்கிறது. முதற் கட்ட தேர்தல் சென்ற அக்டோபர் 28ம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நவம்பர் ஏழாம் தேதி நடைபெற உள்ளது. அந்தத் தேர்தலில் முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான […]
