Categories
தேசிய செய்திகள்

4 வயது சிறுமியிடம் சாக்லேட்டை காட்டி…. அத்து மீறிய இளைஞர்…. அதிர்ச்சியில் பெற்றோர்….!!!!

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பீகார் மாநிலத்தில் உள்ள கோபல்காஞ்ச் பகுதியில் வசித்து வரும் 30 வயது நபர் ஒருவர் 4 வயது சிறுமியை சாக்லேட்டை காட்டி ஏமாற்றி பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து மஞ்சகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்ட போது, விளையாடி கொண்டிருந்த சிறுமியை சாக்லேட்டை காட்டி ஏமாற்றி வீட்டுக்குள் வரவழைத்து பலாத்காரம் செய்தது தெரிய வந்துள்ளது. இதற்கிடையே உயிருக்கு போராடிய நிலையில் அந்த 4 வயது […]

Categories
தேசிய செய்திகள்

பீகார்: நடைபெற்ற முதல் மந்திரியின் நிகழ்ச்சி…. திடீரென விஷம் குடித்த பெண்…. பெரும் பரபரப்பு…..!!!!!

பீகார் மாநிலத்தில் முதல் மந்திரி நிதீஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  அவர் ஒவ்வொரு வாரமும் பொதுமக்களுடன் உரையாடும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். மக்களின் நீதிமன்றத்தில் முதல் மந்திரி எனும் பெயரிலான இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. இதையடுத்து நிகழ்ச்சி முடிந்தபோது கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு வெளியே நின்று இருந்த ஒரு பெண் திடீரென்று விஷம் குடித்துள்ளார். அப்போது முதல்-மந்திரியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காவல்துறையினர் இதனை கவனித்துள்ளனர். உடனே அவர்கள் அந்த பெண்ணை […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க…. என்ன பண்றாங்கண்ணு நீங்களே பாருங்க…..!!!!!

பீகார் மாநிலத்தில் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்குவதற்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து, பாட்னா பல்கலைக்கழக வளாகம் துவங்கி கட் நதிக்கரையோரம் வரை அமர்ந்து அரசுத் தேர்வுக்குப் படிக்கத் தொடங்கியுள்ளனர். பிகார் மாநிலத்தில் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கையில் பேனா மற்றும் புத்தகத்துடன் அமர்ந்து அரசுத் தேர்வுகளுக்காக படிக்கும் அந்த புகைப்படங்களை ஏஎன்ஐ வெளியிட்டுள்ளது. ரயில்வே, மாநில அரசுப் பணி தேர்வாணையம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் தேர்வுகளுக்கும் இந்த மாணவர்கள் தயாராகி வருகின்றனர். இங்கே ஒவ்வொரு வாரமும் சனி […]

Categories
தேசிய செய்திகள்

2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சுவர்… பாரம்பரிய சின்னம் ஆகுமா…? மாநில அரசு பரிந்துரை…!!!!!!

நாலந்தா மாவட்டத்தில் உள்ள 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய கற்சுவரை, ‘யுனெஸ்கோ’வின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் சேர்க்க, மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது. பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் மலைகள் சூழ்ந்த ராஜ்கிர்  நகரை பாதுகாக்கும் வகையில் 40 கிலோ மீட்டர் நீளம் உள்ள மிகப் பழமையான கற்சுவர்  அமைந்துள்ளது. இந்த சுவர் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக பட்டியலிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு  மாநில அரசு பரிந்துரை செய்திருக்கிறது. இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார்: “ஒரே மாதத்தில் 2 தாக்குதல் சம்பவங்கள்”… முதலமைச்சருக்கு மேலும் பாதுகாப்பு…..!!!!!

ஒரே மாதத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக 2 தாக்குதல் சம்பவங்கள் நடந்ததைத் அடுத்து பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாநில முதலமைச்சருக்கும் பாதுகாப்பு வழங்க தேசிய பாதுகாப்பு படையால் சிறப்பு பயிற்சி பெற்ற எஸ்எஸ்ஜி எனப்படும் மாநில பாதுகாப்பு படையினர் பணிபுரிந்து வருகின்றனர். அதாவது முதலமைச்சரின் பயணம் முதல் அவர் தங்கும் இடம் வரையிலும் அனைத்து பகுதிகளிலும் அவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநிலப் பாதுகாப்பு படை உறுதிசெய்கிறது. இந்த நிலையில் சென்ற […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கடவுளே அல்ல… பரபரப்பை ஏற்படுத்திய மாஜி முதல்வரின் பேச்சு…!!!!!

பீகார் மாநிலத்தில் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஜிதன்ராம் மஞ்சி ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சி இடம் பெற்றிருக்கிறது. இந்த நிலையில் பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஜிதன்ராம் மஞ்சி பேசியபோது, நான் ராமரை நம்பவில்லை. ராமர் கடவுளே இல்லை. துளசிதாஸ் மற்றும் வால்மீகி அவர்களின் செய்தியை பரப்புவதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாத்திரம் […]

Categories
தேசிய செய்திகள்

தேசிய அரசியலுக்கு நிதிஷ்குமார் செல்வாரா?…. வெளியான தகவல்…..!!!!!

பீகார்மாநிலம் முதல் மந்திரியும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ளார். இவர் ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தப்படுவார் எனவும் எதிர்க்கட்சி கூட்டணியின் பிரதமர் பதவி வேட்பாளராக நிறுத்தப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதன் வாயிலாக அவர் தேசிய அரசியலுக்கு செல்வார் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் நேற்று பாட்னாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நிதிஷ்குமாரிடம் இது தொடர்பாக கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியிருப்பதாவது, “நான் தேசிய அரசியலுக்கு போவதாக வெளியாகும் யூகங்கள் அனைத்தும் எந்த […]

Categories
தேசிய செய்திகள்

“இரும்பு பாலம் திருட்டு விவகாரம்”…. வசமா சிக்கிய 2 அரசு அதிகாரிகள்…. வெளியான திடுக்கிடும் தகவல்…..!!!!!

பீகாரில் 60 அடி நீளம் உள்ள இரும்பு பாலத்தை  கடந்த சில நாட்களுக்கு முன் சட்ட விரோதமாக தகர்த்த வழக்கில் 2 அரசு அதிகாரிகள்(ஒரு துணைப் பிரிவு அதிகாரி மற்றும் ஒரு வானிலை துறை அதிகாரி) உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறியிருப்பதாவது “இந்த திருட்டு சம்பவத்தில் வானிலைத்துறை அதிகாரி அரவிந்த் குமார், எரிவாயு கட்டர்கள் மற்றும் மற்ற உபகரணங்களுடன் ஆயுதம் ஏந்திய குழுவை வழிநடத்தி இருக்கிறார். இக்குழுவினர் சில […]

Categories
தேசிய செய்திகள்

மக்களின் கண்முன்னே பயங்கரம்…. இரவோடு இரவாக முழு பாலத்தையும் ஆட்டையப்போட்ட கும்பல்….!!!!

பீகார் மாநிலத்தில் நஸ்ரிகஞ்ச் என்ற பகுதியில் 60 அடிக்கு இரும்பு பாலம் ஒன்று இருந்துள்ளது. இந்தப் பாலம் கடந்து 1872 ஆம் ஆண்டு கட்டப்பட்டதால் மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்தது. அதனால் இந்த பாலத்தை பொதுமக்கள் யாரும் பயன்படுத்தவில்லை. இதையடுத்து இந்த பாலத்தின் அருகிலேயே புதிய பாலம் ஒன்று கட்டப்பட்டது. அதனை பொதுமக்கள் தற்போது பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பாழடைந்த இரும்பு பாலத்தை அரசு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு சிலர் பொக்லைன் இயந்திரங்களை கொண்டு […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் டீசல் விலை உயர்வு… குதிரையில் வேலைக்கு செல்லும் மின் ஊழியர்…!!!!

பெட்ரோல் உயர்ந்து வருவதை தொடர்ந்து தனது பைக்கை கைவிட்ட நபர் ஒருவர் குதிரை சவாரி செய்து வருகிறார். பீகார் மாநிலம் ஷெயோவர் பகுதியை சேர்ந்த அபிஜித் திவாரி.இவர்  மின்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார்.இவர்   குதிரை சவாரியை விட பைக்கில் போவது இரண்டு மடங்கு செலவாகும் அவர் கூறியுள்ளார். இவரது தந்தை குதிரையை பாசத்துடன் வளர்த்து வந்துள்ளார். வீட்டிலேயே குதிரை இருந்ததாலும், குதிரை சவாரியில் பயிற்சி இருந்ததாலும் அபிஜித் பைக்கை கைவிட்டு குதிரை பயணத்திற்கு மாறி உள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

மது அருந்துபவர்கள் இந்தியர்கள் அல்ல…. அவர்கள் பெரும் பாவிகள்…. முதல்வரின் அதிரடி பேச்சு…!!!

பீகாரில் பெருகி வரும் விஷ சாராயம் விற்பனைக்கு எதிராக முதல்வர் நிதிஷ்குமார் கூறியுள்ளதாவது,  மது அருந்துபவர்கள் மகா பாவிகள் என்றும் விஷ சாராயம் குடித்து உயிரிழப்பவர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டியது  அரசுக்கு கட்டாயம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு பீகாரில் மதுவிலக்கை திறம்பட அமல்படுத்தாததால், அம்மாநிலத்தில் மது நெருக்கடி நீடிப்பதாகவும், இதனால் கள்ளச்சாராய விற்பனை தலை தூக்கியுள்ளது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலளித்துள்ளார். இதையடுத்து மகாத்மா காந்தி கூட மதுவுக்கு எதிரானவர் என்றும், அவரது […]

Categories
தேசிய செய்திகள்

இன்று(ஏப்ரல்1) முதல்…. இந்த பஸ்கள், ஆட்டோக்களுக்கு தடை….. கவலையில் ஓட்டுநர்கள்…..!!!!!!

பீகார் மாநிலத்தில் இன்று (ஏப்ரல்.1) முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு அம்மாநில போக்குவரத்துதுறை தடை விதித்துள்ளது. இவ்வாறு பீகார் போக்குவரத்து துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

பீகார்: நாளை முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள், ஆட்டோக்களுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு……!!!!!

பீகார் மாநிலத்தில் நாளை (ஏப்ரல்.1) முதல் டீசலில் இயங்கும் பேருந்துகள் மற்றும் ஆட்டோக்களுக்கு அம்மாநில போக்குவரத்துதுறை தடை விதித்துள்ளது. இவ்வாறு பீகார் போக்குவரத்து துறையின் முடிவால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருப்பதாக ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

“ஆளும் ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர்”…. துப்பாக்கியால் சுட்டு கொலை…. பின்னணி என்ன?…..!!!!!

பீகார் மாநிலத்தில் முதல்-மந்திரி நிதீஷ் குமார் பக்தியார்பூர் நகரில் ஷீல்பத்ரா யாஜி என்ற சுதந்திர போராட்ட வீரரருக்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற 2 நாட்களுக்கு முன்பு சென்றார். அப்போது அவருடன் பாதுகாவலர்களும் இருந்தனர். இதனிடையில் அவர் மலர் அஞ்சலி செலுத்தி கொண்டிருந்தபோது, வாலிபர் ஒருவர் மேடை ஏறி சென்று முதல்-மந்திரியின் தோளில் ஒரு குத்து விட்டுள்ளார். இதனை பார்த்ததும் அருகே இருந்த பாதுகாவலர்கள் உடனே வாலிபரை சூழ்ந்து கொண்டு தள்ளி சென்றனர். இதையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

மேடையில் முதலமைச்சரை தாக்க முயற்சி…. இணையத்தில் வைரலாகும் வீடியோ….!!!!

நேற்று பீகாரில் உள்ள பக்தியார்பூர் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமார் பங்கேற்றார். அப்போது பாதுகாவலர்களும் அவருடன் இருந்தனர். இதையடுத்து அவர் சுதந்திர போராட்ட வீரரான ஷீல்பத்ரா யாஜிக்கு மலரஞ்சலி செலுத்துவதற்காக மேடை ஏறியுள்ளார். பின்னர் அவர் மலரஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த வேளையில் உள்ளூர் இளைஞர் ஒருவர் விறுவிறுவென நடந்து வந்து பாதுகாப்பு வளையத்தில் சிக்காமல் மேடை ஏறியுள்ளார். அதன்பிறகு முதலமைச்சரின் தோளில் ஒரு குத்து விட்டுள்ளார். அதனை கண்ட பாதுகாவலர்கள் அந்த […]

Categories
மாநில செய்திகள்

“பீகாரை ஆளும் பாஜக கூட்டணியை விமர்சித்த பாஜக எம்.எல்.ஏ”… பீகாரில் பரபரப்பு…!!!

பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியை அம்மாநில பாஜக எம்எல்ஏ ஒருவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். பீகாரில் நிதிஷ்குமார் கட்சியுடன் கூட்டணியில் உள்ள பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை அம்மாநிலத்தின் பாஜக எம்.எல்.ஏ ஹரிபூஷன் தாக்கூர் பச்சோல் கடுமையாக விமர்சித்திருக்கிறார். செய்தியாளர் சந்திப்பின்போது அவர் கூறியுள்ளதாவது, “ஒரு ஊழல் வழக்கில் முசாபர்பூர் காவல் கண்காணிப்பாளருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார் அளித்திருந்தேன். ஆனால் அதில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அந்த அதிகாரி சட்டம் மற்றும் ஒழுங்கு நுணுக்கங்களை எனக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இளம்பெண்ணிடம் அத்துமீறல்…. சிக்கிய கிரிக்கெட் சங்க தலைவர்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

விளம்பர நிறுவனம் ஒன்றின் பெண் இயக்குனர், பீகார் கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் ராகேஷ் திவாரி மீது பார்லிமென்ட் தெருவில் உள்ள காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் பாலியல் பலாத்காரம் தொடர்பான பிரிவுகளின் கீழ் ராகேஷ் திவாரி மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அந்த பெண் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தனது நிறுவனத்தை பீகார் கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த ஒரு போட்டிக்கான விளம்பரப் பணியில் இணைத்துக் கொண்டுள்ளார். இருப்பினும் […]

Categories
தேசிய செய்திகள்

“நான் அவரை கல்யாணம் பண்ண மாட்டேன்”…. மகளை கவுரவ கொலை செய்த தந்தை…. பரபரப்பு…..!!!!!!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் தேவ் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலாவதி என்ற மனைவியும், கிரண் குமாரி (19) என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் தேவ் ராம் தன் மகளுக்கு நாடி சர்மா என்பவரை திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளார். ஆனால் இவரது மகள் கிரண் குமாரி அதே பகுதியை சேர்ந்த வேறொரு நபரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால் தனது தந்தையிடம் நாடி சர்மாவை திருமணம் செய்துகொள்ள முடியாது என்று கிரண் […]

Categories
தேசிய செய்திகள்

“சாப்பாடு இவ்ளோ லேட்டா போடுறீங்க” கடுப்பான மணமகன்…. பின்னர் என்ன நடந்தது தெரியுமா…??

மணமகனின் உறவினர்களுக்கு  தாமதமாக சாப்பாடு பரிமாறப்பட்டதால் திருமணம்  நின்று போனது.  பீகார் மாநிலத்தில் பட்டுவானா  கிராமத்திலுள்ள மோஹானி  பஞ்சாயத்தில் இஸ்வாரி  தோலாவில் திருமண நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் பூர்னியாவை  சேர்ந்த ராஜ்குமார் ஒராவ்ன்  என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மீனா தேவி என்பவரின் மகளுக்கும் தான் திருமணம் நடைபெற இருந்துள்ளது. இதற்கான வரவேற்பு நிகழ்ச்சியின் போது மணமகனின் உறவினர்களுக்கு  தாமதமாக சாப்பாடு பரிமாறப்பட்டது. இதை அறிந்த மணமகனும் அவரது தந்தையும் ஆத்திரம் அடைந்து திருமணத்தை நிறுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி…. அதிர்ச்சித் தகவல்…!!!!!

லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பீகாரின்  முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் (வயது 73). இவர் 5 வது கால்நடை தீவன ஊழல் வழக்கில் கடந்த 15ஆம் தேதி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளநிலையில் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ராஞ்சியில் உள்ள மருத்துவ அறிவியல் நிலைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது லாலு பிரசாத் சிகிச்சை […]

Categories
தேசிய செய்திகள்

அடக்கொடுமையே…. மாணவர்களுக்கு இப்படி ஒரு அவலமா?…. அதுவும் வாகன வெளிச்சத்தில்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பீகார் மாநிலம் கிழக்கு சாம்பரான் மாவட்டத்திலுள்ள மோதிஹாரி நகரில் அமைந்துள்ள ஒரு கல்லூரியில் நேற்று முன்தினம் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி தேர்வு நடைபெற்றது. இதில் மகாராஜா ஹரேந்திர கிஷோர் சிங் கல்லூரிக்கு 400 மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக வந்தனர். அப்போது அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததால், மாணவர்களும், பெற்றோர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகமானது மாணவர்களை சமாதானம் செய்து தேர்வு எழுதுவதற்காக அழைத்து வந்தனர். வழக்கமாக தேர்வு 1.45 மணிக்குத் தொடங்கி […]

Categories
அரசியல்

ரயிலில் தீ வைத்த தேர்வர்கள்…. மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது…. -ரயில்வே மந்திரி…!!!

மத்திய ரெயில்வே மந்திரி, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். ரயில்வே தேர்வு வாரியம் வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி போராட்டம் நடத்திய இளைஞர்கள், பீகார் மாநிலத்தில் உள்ள கயா பகுதியில் நின்ற ரயில் பெட்டிக்கு தீ வைத்தனர். மேலும் ஓடும் ரயிலில் கற்களைக் கொண்டு எறிந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வில் முறைக்கேடு?…. “பயணிகள் ரயிலுக்கு தீ வைத்த தேர்வர்கள்”…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள கயாவில் ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த தேர்வை ரத்து செய்யக் கோரி இன்று காலை முதல் கயாவில் தேர்வர்கள் பயங்கர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கயா ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் சிலர் அங்கு நின்று கொண்டிருந்த பயணிகள் ரயில் பெட்டிக்கு தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர். இதற்கிடையே காவல்துறை கண்காணிப்பாளரான ஆதித்யா குமார், […]

Categories
தேசிய செய்திகள்

குழந்தைக்கு தடுப்பூசி போட வந்த பெண்…. செருப்பால் அடித்த செவிலியர்…. பகீர் சம்பவம்….!!!!

பீகார் மாநிலம் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஒரு குழந்தைக்கு பிசிஜி எனும் காசநோய் தடுப்பூசி போடுவதற்காக பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் செவிலியர் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டுமென்றால் 500 ரூபாய் லஞ்சம் தரவேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் நான் ஏன் உங்களுக்கு தரவேண்டும்…? இது அரசு மருத்துவமனைதானே..? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த நிலையில் செவிலியர் 500 ரூபாய் வாங்கவேண்டும் என்பதற்காக அந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.. […]

Categories
தேசிய செய்திகள்

“காதலுக்கு எதிர்ப்பு”… அதுக்காக இப்படியொரு நாடகமா?…. குடும்பத்தை கூண்டோடு ஜெயிலுக்கு தள்ளிய இளைஞர்…..!!!!!

பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டம் பாலுவாடோலா கிராமத்தில் முன்னா ஷா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணை திருமணம் செய்ய முன்னா ஷாவின் வீட்டார் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் முன்னா ஷா வீட்டில் சந்தேகப்படும்படி ரத்த கறையாக இருக்கிறது என்று அப்பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முன்னா ஷாவின் காதல் விவகாரம் பிடிக்காததால் அவர்களது குடும்பத்தினரே அவரை கொலை […]

Categories
தேசிய செய்திகள்

மகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்…. நீதிமன்றத்தில் வைத்தே சுட்டுக்கொன்ற தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!!!

பீகார் மாநிலம் முசாபர்பூரில் வசித்து வருபவர் தில்ஷாத் ஹுசைன். இவர் அந்த பகுதியில் ஒரு சைக்கிள் கடை வைத்து நடத்தி வந்தார். இவர் வீட்டு அருகே உள்ளவர் பகவத் நிஷாத். கடந்த 2020-ஆம் ஆண்டு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தில்ஷாத்தின் மகளை பகவத் நிஷாத் கடத்தி சென்றிருக்கிறார். இதைடுத்து 2021-மார்ச் மாதம் ஹைதராபாத்தில் தில்ஷாதத்தை காவல்துறையினர் கைது செய்து சிறுமியை மீட்டனர். பின்னர் சிறுமி அளித்த பாலியல் பலாத்கார புகாரின் அடிப்படையில் தில்ஷாத் மீது போக்சோ […]

Categories
தேசிய செய்திகள்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற அதிகாரி…. பின்னர் ஏற்பட்ட விபரீதம்… பெரும் பரபரப்பு சம்பவம்….!

பீகார் மாநிலம் சாஹர்சா மாவட்டத்தில் அப்பாஸ் நாராயண் கான் என்பவர் வசித்துவருகிறார். இவர் கதிஹர் மாவட்டத்தில் சல்மாரி ரயில் நிலையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அப்பாஸ் நாராயண் கான் நேற்று அதிகாலை கதிஹர் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயற்சி செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயில் நிலைய நடைமேடைக்கும் ரயில் பெட்டியில் ஏறுவதற்கும் இடையே அவரது கால் சிக்கிக்கொண்டது. இதனால் அவர் நிலைதடுமாறி ரயில் தண்டவாளத்தில் விழுந்தார். இதில் வேகமாக சென்ற எக்ஸ்பிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ஜன.21ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் மூடல்…. 50% அரசு ஊழியர்களுக்கு அனுமதி… மாநில அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊரடங்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்கள் ஜனவரி 21-ஆம் தேதி வரை மூடப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

போலீஸ் வாகனம் மீது லாரி மோதி கோர விபத்து…. 3 பேர் உயிரிழந்த சோகம்….!!!!

போலீஸ் ரோந்து வாகனத்தின் மீது லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 3 போலீசார் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பீகார் மாநிலம் பியூர் மோர் பகுதிக்கு உள்பட்ட போலீஸ் நிலையத்தில் காவலர்கள் ஐந்து பேர் சேர்ந்து வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பியூர் மோர் பகுதியில் அவர்கள் ரோந்து சென்றபோது எதிரே வந்த லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து போலீஸ் வாகனத்தின் மீது மோதியது. இதில் வாகனம் தீப்பற்றி எரிந்தது. இதனால் வாகனத்தில் இருந்த 3 போலீசார் உடல் […]

Categories
தேசிய செய்திகள்

1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு… ஜனவரி 8ஆம் தேதி வரை…. மாவட்ட நிர்வாக அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்தியாவில் 1700 பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் தேவைப்பட்டால் முழு ஊரடங்கு பிறப்பித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா மாவட்டத்தில் கடும் குளிர் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதாவது இன்று முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட்னா மாவட்ட […]

Categories
தேசிய செய்திகள்

வெடித்து சிதறிய கொதிகலன்…. நொடியில் பறிபோன 6 உயிர்…. பெரும் சோகம்….!!!!

பீகார் மாநிலமான முசாபர்பூர் நகரில் தனியாருக்கு சொந்தமான நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் ஒன்றில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக 6 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் 6-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையில் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி பட்டியல் – மோடி, சோனியா காந்தி, பிரியங்கா சோப்ரா…. பெரும் பரபரப்பு….!!!!

பீகார் மாநிலத்தில் உள்ள அர்வால் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா, உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் பிரபல இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பட்டியலின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதையடுத்து பீகார் மாநில சுகாதார துறை அதிகாரிகள் தீவிர விசாரணை ஈடுபட்டனர். அப்போது ஆப்பரேட்டர் பிரவீன் குமார் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. 2 டோஸ் தடுப்பூசி போட்டால் டிவி, பிரிட்ஜ், கிரைண்டர் பரிசு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட்டு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடாமல் தவற விடுபவர்கள் எல்லா இடங்களிலும் உள்ளனர். அதனால் பீகார் மாநிலத்தில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு மாபெரும் பரிசுத் திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. லாட்டரி குலுக்கல் மூலம் பரிசுக்குறியவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். டிவி, பிரிட்ஜ், கிரைண்டர், கேஸ் ஸ்டவ், மின்விசிறி மற்றும் போர்வை என பரிசு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

சட்டவிரோதமாக மதுபான வியாபாரம் செய்தால்…. கடுமையான தண்டனை…. அரசு எச்சரிக்கை…!!!

பீகார் மாநிலத்தின் மதுவிலக்குக் கொள்கை குறித்த மதிப்பீட்டு கூட்டத்திற்கு முன்னதாக நடந்த ஜனதா தர்பார் என்ற நிகழ்ச்சிக்கு பிறகு நிதீஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், கள்ளச்சாராய மரணங்களை சாக்காக வைத்து மது விலக்கு பற்றி தவறான பிரச்சாரம் செய்யப்படுகிறது. பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது என்று பேசினார்.  தொடர்ந்து பேசிய அவர், மதுவை உட்கொண்டால் மக்கள் இறந்து விடுவார்கள். இது ஒரு மோசமான பொருள். ஆனால் இது தெரிந்தும் ஏன் […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் குற்றங்கள் குறைவு…. இது தான் காரணமா?…. முதல்வர் நிதிஷ் அதிரடி நடவடிக்கை…!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டீரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பீகாரில் பூரண மதுவிலக்கை நிதிஷ்குமார் கொண்டு வந்துள்ளார். இந்த சட்டத்தின்படி மது விற்பனை, மதுவை பதுக்கி வைப்போர் மற்றும் குடிப்பவர்கள் மீது 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பாட்னாவில் முதல் மந்திரி நிதிஷ் குமார் செய்தியாளர்களிடம் பேசிய போது, மாநிலத்தில் மதுவிலக்கு சட்டத்தை அமல்படுத்தியதால் பலரும் எனக்கு எதிராக திரும்பியுள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

“கள்ளச்சாராயம்” 23 பேர் உயிரிழப்பு…. 700 அதிகாரிகள் பணியிடை நீக்கம்….!!

பீகார் மாநிலத்தில் கடந்த 2 நாட்களில் 23 பேர் கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்ததுடன் 700 அரசு அதிகாரிகள் இதன் காரணமாக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பீகார் அமைச்சர் கூறியுள்ளார். பீகார் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் இருப்பதால் பல்வேறு இடங்களில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்ற நிலையில், பீகாரின் கோபால்கஞ்ச் மற்றும் மேற்கு சாம்பாரன் மாவட்டங்களில் கள்ளச் சாராயம் அருந்தி 2 நாட்களில் 23 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 -ற்கும் மேற்பட்டோர் […]

Categories
தேசிய செய்திகள்

வாக்கிங் சென்ற 6 மாத கர்ப்பிணி… காரில் வந்த மர்ம கும்பலால்… பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!!!

பீகார் மாநிலத்தில் பாட்னாவில் வசிக்கும் 21 வயதான பெண் ஒருவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். அவர் மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். சம்பவத்தன்று இரவில் கர்ப்பிணி வழக்கம்போல தனியாக வாக்கிங் சென்றுள்ளார். அப்போது காரில் வந்த மூன்று இளைஞர்கள் அவரை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் அந்த பெண் பாட்னா ரயில் நிலையத்தில் அழுதபடி அமர்ந்து இருந்தார். இதை […]

Categories
தேசிய செய்திகள்

ஷாப்பிங் மாலில்…. “ஒரு பையனுக்காக குடும்பி புடி சண்டை போட்ட 3 பெண்கள்”… வைரலாகும் வீடியோ…!!!!

பீகார் மாநிலத்தில், ஒரு ஷாப்பிங் மாலில் ஒரு இளைஞனுக்காக 3 பெண்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் வைரலாகி வருகின்றது. பீகார் மாநிலம், முசாஃபர்நகர் பகுதியில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் ஒரு இளைஞனுக்கு மூன்று பெண்கள் சண்டை போட்டுக் கொண்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவில் மூன்று பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்கின்றனர். ஒரு பையனுக்காக மூன்று பெண்கள் அடித்துக்கொள்வது அவர்கள் பேசுவதிலிருந்து தெரியவருகிறது. முதலில் இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

அதிர்ச்சி வீடியோ… “பாம்புகளுக்கு ராக்கி கட்டும்போது நடந்த விபரீதம்..!!

பீகாரில் ராக்கி கயிறு கட்ட முயன்ற போது பாம்பு கடித்ததால் சுற்றுச்சூழல் ஆர்வலர் பரிதாபமாக உயிரிழந்தார்.. ரக்ஷா பந்தன் என்பது சகோதரிகள் தங்களது சகோதரர்கள்  சந்தோசமாக நீண்ட ஆயுளுடன் வாழ்க்கை வாழ்வதற்கு ஒரு பாதுகாப்பான கயிற்றை அதாவது நூலை கட்டுவார்கள்.. இது ‘ராக்கி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி இந்தியா முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் பீகாரில் ரக்ஷா பந்தன் கொண்டாடும் விதமாக சுற்றுச்சூழல் ஆர்வலர் இரண்டு பாம்புகளை […]

Categories
தேசிய செய்திகள்

பீகாரில் 1-8 வரை…. மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் பீகார் மாநிலத்தில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

48 மணி நேரத்தில் வேட்பாளர் குற்றப்பின்னணி…. உச்சநீதிமன்றம் கெடு….!!!!

வேட்பாளரின் குற்றப்பின்னணி தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது. தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்த 48 மணி நேரத்தில் அவர்களின் குற்றப்பின்னணியை வெளியிட வேண்டும். வேட்பாளரின் குற்றப்பின்னணி விவரங்களை வெளியிடாத கட்சிகளின் தேர்தல் சின்னத்தை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தலின்போது வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டபின், 48 மணி நேரத்துக்குள் ஏன் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற விவரத்தையும், அவர்கள் மீதான குற்ற வழக்குகள் தொடர்பான விவரங்களையும், அவர்கள் சார்ந்திருக்கும் அரசியல் கட்சிகள் கண்டிப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

கரு கலையாமல் இருக்க 8 வயது சிறுமி நரபலி…. கொடூர சம்பவம்….!!!!!

நம் நாட்டில் பெரும்பாலானோர் மூடநம்பிக்கைகளை பெரிதும் நம்புகிறார்கள். ஆனால் அதில் நடக்கும் விபரீதங்களை பற்றி அவர்கள் யாரும் கவலை கொள்வதில்லை. சிலர் பரிகாரம் என்ற பெயரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவதை அழிந்தாலும், மூட நம்பிக்கைகளை நம்பி தான் மக்கள் செயல்பட்டு வருகிறார்கள். தினந்தோறும் ஏதாவது ஒரு பகுதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதுவும் சமீப காலமாக மூடநம்பிக்கை இந்தியாவில் தீவிரமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் பீகார் மாநிலம் பாதாம் கிராமத்தில் கர்ப்பிணியின் கரு கலையாமல் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்க்ளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறப்பு…. பீகார் அரசு அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்  9 முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதலும், […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் 9,10-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. பள்ளிகள் திறப்பு…. பீகார் அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால்  மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டது. இதற்கு மத்தியில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. இந்நிலையில் ஒரு சில மாநிலங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில்  9 முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதலும், […]

Categories
தேசிய செய்திகள்

ஏற்கனவே 2 மனைவி இருக்கும் போது… 3வது திருமணம் கேக்குதா…? கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கிய 2வது மனைவி…!!!

தனது கணவர் மூன்றாவது திருமணம் செய்ய நினைத்ததால் இரண்டாவது மனைவி பத்தி ஒன்றை எடுத்து கணவரின் பிறப்புறுப்பை துண்டாக்கி வெட்டியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் அருகே உள்ள மவுல்வி வகில் அஹ்மத் என்ற நபருக்கு 57 வயதாகிறது. இவர் ஒரு மதகுரு ஆவார்.  இவர் ஏற்கனவே இரண்டு பெண்களுடன் திருமணமாகி ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் மூன்றாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார். இதன் காரணமாக இரண்டு மனைவிகளுக்கும் இவருக்கும் இடையே […]

Categories
தேசிய செய்திகள்

கள்ளகாதலுக்கு இடையூறாக இருந்த… காதலியின் 10 வயது மகன்… கொடூரமாக கொலை செய்த காதலன்….!!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த காதலியின் மகனை காதலன் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில், பாருராஜ் என்ற பகுதியை சேர்ந்த 45 வயதான தாய் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 10 வயது சிறுவன் நீரஜ் குமாருடன் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த பண்டிட் என்ற நபருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் அந்த 10 வயது சிறுவனுக்கு தெரியாமல் அடிக்கடி உல்லாசமாக […]

Categories
தேசிய செய்திகள்

கணவனுக்கு சிகிச்சை அளிக்க சொன்னால்…”என்னை பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள்”… மனைவியின் அதிர வைக்கும் வாக்குமூலம்..!!

பீகார் மாநிலத்தில் மருத்துவமனையில் கணவனுக்கு சிகிச்சை அளிக்க கூறினால் மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். நொய்டாவை சேர்ந்த தம்பதியினர் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்கு பீகார் மாநிலத்திற்கு வந்துள்ளன. இதையடுத்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதனால் அங்கேயே தங்கியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் மனைவி அங்கு உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மருத்துவமனையில் கணவனுக்கு சிகிச்சை முறையாக அளிக்கப்படவில்லை என்று மனைவி குற்றம்சாட்டியுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

48 சடலங்கள்… புனித ஆற்றில் மிதந்த கொடுமை… அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!!

பீகார் மாநிலத்தில் உள்ள கங்கை நதியில் 48 சடலங்கள் மிதந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் இருக்கும் சவுதா என்ற கிராமத்தில் கங்கை நதியில் கரையை ஒட்டி பல சடலங்கள் மிதந்தது. சுமார் 48 உடல்கள் மிதந்து வந்ததது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து உள்ளூர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்து பார்த்த அதிகாரிகள் அது கொரோனவால் உயிரிழந்தவர்களின் உடலாக இருக்கலாம் என்று சந்தேகித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

கங்கை நதியில் மிதந்த 150 சடலங்கள்….. பீதியடைந்த மக்கள்….!!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: மே-15 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு…. அரசு அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories

Tech |