சென்னை உணவுத் திருவிழாவில் இன்று முதல் பீஃப் பிரியாணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை தீவு திடலில், சிங்காரச் சென்னையில் உணவு திருவிழா என்று மூன்று நாள் கண்காட்சியை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர். நாளை வரை இந்த உணவு திருவிழா நடைபெற உள்ளது. மூன்று நாள் உணவு திருவிழாவில் பாரம்பரிய உணவு வகைகள், சிறு தானிய வகைகள், 65 வகையான தோசை வகைகள், பிரியாணி வகைகள், பாரம்பரிய நெல், […]
