அடுத்து நடைபெறும் போட்டியில் இந்திய அணி பிளெயிங் லெவனில் மாற்றம் செய்ய வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 7-வது டி20 உலக கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் ‘சூப்பர் 12’ சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதியது. ஆனால் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று வரலாற்று சாதனைப் படைத்தது .இது இந்திய அணி பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. […]
