கொரோனா நோயளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் தற்பொழுது ஒமைக்ரான் தொற்றானது வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்த நோயாளிகளின் ரத்தத்தில் இருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்மாவை தற்போது பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செலுத்தக் கூடாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை அளித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறை […]
