மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பாலப்பட்டி வரை சென்று மீண்டும் ஒன்றிய அலுவலகம் வரை மோட்டார் சைக்கிளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி தொடங்கி வைத்தார். இந்நிலையில் இந்த ஊர்வலத்தில் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். […]
