பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகராட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். இதில் நகராட்சி தலைவர் சுப்ராயலு, நகராட்சி ஆணையர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசினார். அவர் பிளாஸ்டிக் பொருட்களை அனைவரும் பயன்படுத்துவதை கைவிட வேண்டும். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சப்பையை […]
