மத்திய உள்துறை அமைச்சகம், பிளாஸ்டிக் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது, என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 15 ஆம் தேதி அன்று, நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில், நாட்டு மக்கள் தேசியக்கொடி மேல் பற்று மற்றும் மரியாதை வைத்திருக்கிறார்கள். எனவே தான், சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை தங்கள் சட்டையில் குத்தி செல்கிறார்கள். தேசியக்கொடிக்கான மரியாதையை […]
