திருவள்ளூரில் கடம்பத்தூர் ஒன்றிய கொட்டையூர் காலனி பெருமாள் கோவில் தெருவில் பரந்தாமன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் ஜானகிராமன்(17). இவர் பேரம்பாக்கத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தேர்வு எழுதி உள்ளார். வருகின்ற 27ஆம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவு வெளியாக உள்ளது. இதனையடுத்து தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற பயத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் தன் வீட்டின் அருகில் உள்ள குளக்கரைக்கு சென்ற ஜானகிராமன் அங்கு இருந்த […]
