ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் +1 மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து தமிழக அரசு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. பிறகு மத்திய அரசு பிளஸ் 2 சிபிஎஸ்சி பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்ததையடுத்து, தமிழக அரசு மாணவர்களின் நலன் கருதி, +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்திருந்தது. […]
