கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பிளஸ்டூ மாணவி உயிரிழந்ததை தொடர்ந்து அந்த கடையை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மூடி சீல் வைத்துள்ளனர். கேரள மாநிலம், கசரக்கோடு மாவட்டத்தை சேர்ந்த பிளஸ் டூ மாணவி தேவானந்தா. இவர் கரிவெள்ளூர் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பயின்று வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது பள்ளி நண்பர்கள் சக மாணவிகளுடன் பள்ளிக்கூடம் அருகே அமைந்துள்ள ஐடியல் என்ற குளிர்பான கடையில் சவர்மா சாப்பிட்டுள்ளார். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே தேவானந்தாவுக்கு வாந்தி, மயக்கம், […]
