திருச்சி விமான நிலையத்தில் நடைபெறும் கொரோனா பரிசோதனை பணிகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்தும் சுகாதாரம் மற்றும் மக்கள் நல வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு செய்துள்ளார். அதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 24-ஆம் தேதி முதல் பன்னாட்டு விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் வெளியிட்டிருந்த பதிவில் சீனா, தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு […]
