பிலிப்பைன்ஸில் அதிபர் தேர்தலின்போது ஏராளமான வாக்குச்சாவடிகளில் துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு வீச்சு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பிலிப்பைன்ஸ் நாட்டில் அதிபர் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது. இதனை தொடர்ந்து புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் அதிபரை தவிர்த்து, துணை அதிபர், 12 செனட்சபை உறுப்பினர்கள், 300-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் 17,000-க்கும் அதிகமான உள்ளாட்சி அமைப்புகளுக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் […]
