நவம்பர் 24 கிரிகோரியன் ஆண்டின் 328 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 329 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 37 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 380 – உரோமைப் பேரரசர் முதலாம் தியோடோசியசு கான்ஸ்டண்டினோபிலை சென்றடைந்தார். 1227 – போலந்து இளவரசர் லெசுச்செக் படுகொலை செய்யப்பட்டார். 1359 – முதலாம் பீட்டர் சைப்பிரசின் மன்னராக முடி சூடினார். 1639 – ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார். 1642 – ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாசுமேனியா எனப் பெயர் பெற்றது. 1750 – மராத்தியப் பேரரசின் ஆட்சிப் பொறுப்பாளர் தாராபாய், கோலாப்பூர் மன்னர் இரண்டாம் ராஜாராமை பேஷ்வா பதவியில் இருந்து பாலாஜி பாஜி […]
