சனவரி 14 கிரிகோரியன் ஆண்டின் 14 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 351 (நெட்டாண்டுகளில் 352) நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1236 – இங்கிலாந்து மன்னர் மூன்றாம் என்றி புரோவென்சு இளவரசி எலனோரைத் திருமணம் செய்தார். 1301 – அங்கேரி மன்னர் மூன்றாம் அன்ட்ரூ இறந்தார். 1539 – எசுப்பானியா கியூபாவை இணைத்துக் கொண்டது. 1690 – கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது. 1724 – எசுப்பானிய மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான். 1761 – இந்தியாவில் மூன்றாம் பானிபட் போர் அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. 1784 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா பெரிய பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. 1814 – கீல் […]
