செப்டம்பர் 22 கிரிகோரியன் ஆண்டின் 265 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 266 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 100 நாட்கள் உள்ளன. இன்றைய தின நிகழ்வுகள் 1586 – நெதர்லாந்து, சூட்பென் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் எசுப்பானியர் ஆங்கிலேய-இடச்சுப் படைகளை வென்றனர். 1692 – ஐக்கிய அமெரிக்காவில் சூனியக்காரர்களின் கடைசித் தொகுதியினர் தூக்கிலிடப்பட்டனர். 1711 – டஸ்கரோரா பழங்குடிகள் அமெரிக்கா, வட கரொலைனாவில் பாம்லிக்கோ ஆற்றுப்படுகையில் குடியேற்றவாசிகளைத் தாக்கி 130 பேரைக் கொன்றனர். 1761 – மூன்றாம் ஜார்ஜ் பெரிய பிரித்தானியாவின் அரசராகவும், சார்லொட் அரசியாகவும் முடிசூடினர். 1784 – அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் உருசியா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது. 1789 – ரிம்னிக் சண்டையில் உதுமானியப் படைகளைத் […]
