அக்டோபர் 5 கிரிகோரியன் ஆண்டு 278 ஆம் நாள். நெட்டாண்டு 279 ஆம் நாள். ஆண்டு முடிவு மேலும் 87 நாள். இன்றைய தின நிகழ்வுகள் 610 – எராகிளியசு ஆப்பிரிக்காவில் இருந்து கான்ஸ்டண்டினோபோலை கப்பல் மூலம் அடைந்து பைசாந்தியப் பேரரசன் போக்காசை ஆட்சியில் இருந்து கவிழ்த்து பேரரசனானான்.[1] 816 – புனித உரோமைப் பேரரசராக லூயி பயசு முடிசூடினார். 1143 – லெயோன், காசுட்டில் மன்னர் ஏழாம் அல்பொன்சோ போர்த்துகலை ஒரு இராச்சியமாக அங்கீகரித்தார். 1450 – பவேரியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர். 1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை. 1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு […]
வரலாற்றில் இன்று அக்டோபர் 5…!
