சிறுமியின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தாமதமானதால் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டார்கள். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பல்லடம் அருகே இருக்கும் வேலப்பகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன்-கலைவாணி தம்பதியரின் மகள் தர்ஷனா (10). இந்நிலையில் சென்ற இருபத்தி ஒன்றாம் தேதி சிறுமி தாய் தந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இவர்களின் கார் பெரம்பலூர் அருகே வரும் பொழுது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தர்ஷனாவுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் […]
