மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி குறித்த தவறான தகவல்களை பரப்பியதற்காக பிரேசில் அதிபர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாடு கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸை ஒரு சாதாரண காய்ச்சல் போல பாவித்து வரும் பிரேசில் அதிபர் ஜெயீர் போல்சனரோ கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி குறித்தும் விமர்சனம் செய்துள்ளார். அதாவது சமூக வலைதளம் மூலம் கடந்த அக்டோபர் மாதம் கொரோனா தடுப்பூசி குறித்து பேசிய போல்சனரோ […]
