சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதனன் ரெட்டி உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரபாவதி அறிவுறுத்தலின்படி, காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர், பாரி நகர், ஸ்ரீராம் நகர் போன்ற பகுதிகளில் சாலையோர கடைகள், பாஸ்ட்புட் உணவகங்கள், பஜ்ஜி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீடிர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது கடைகளில் கெட்டுப்போன புரோட்டா, சிக்கன் பிரியாணி மற்றும் செயற்கை நிறம் சேர்க்கப்பட்ட காளான், மீன் போன்றவை பறிமுதல் செய்து அவை அழிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 6 […]
