பிரித்தானிய இளவரசியும், ஐக்கிய ராஜ்யத்தின் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் பேத்தியுமான பீட்ரைஸின் மகளுக்கு புதிய பெயர் ஒன்று மகாராணியாரின் பெயருடன் சேர்த்து சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய இளவரசி பீட்ரைஸ் மற்றும் எடோர்டா மாபெல்லி மோஸ்ஸி தம்பதியருக்கு சமீபத்தில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்தப் பெண் குழந்தை கடந்த செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி சனிக்கிழமை அன்று இரவு 11.42 மணி அளவில் லண்டனில் உள்ள செல்சியா மற்றும் வெஸ்ட்மினிஸ்டர் மருத்துவமனையில் சுமார் 2.7 கிலோ […]
