பிரித்தானியாவில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் நாட்டிங்ஹாமில் ஒரு தொழிற்பேட்டையில் உள்ள உலோக தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு வேளையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயானது தொழிற்சாலை முழுவதும் பரவி மளமளவென எரிந்தது. இந்நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து Nottinghamshire தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறியபோது “எங்களுக்கு இரவு 7.20-க்கு Dunkirk பகுதியில் […]
