Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணை உயிரோடு எரித்த கொடூரம்.. 3 இளைஞர்கள் கைது.. வேதனையளிக்கும் சம்பவம்..!!

பிரிட்டனில் 31 வயதுடைய பெண்ணை மூன்று இளைஞர்கள் சேர்ந்து உயிரோடு தீ வைத்து எரித்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள மான்செஸ்டரின் Bury என்ற பகுதியில் நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ஒரு பெண்ணை மூவர் சேர்ந்து உயிரோடு தீ வைத்துள்ளனர். இதனைப்பார்த்து பதறிய அங்கிருந்த மக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சில நிமிடங்களில் காவல்துறையினர் சம்பவ இடத்தை அடைந்தனர். அங்கு, அந்த பெண் உடல் முழுக்க தீக்காயங்கள் ஏற்பட்டதால் அலறி […]

Categories
உலக செய்திகள்

“குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை ஏற்படும்!”.. இளவரசர் ஹாரியின் புத்தகம்.. வருத்தத்தில் மூழ்கிய நண்பர்கள்..!!

இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை கதையை புத்தகங்களில் வெளிப்படையாக குறிப்பிட்டிருப்பதால் அவரின் நெருங்கிய நண்பர்கள் வருத்தம் அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இளவரசர் ஹாரியின் நெருங்கிய நண்பர்கள், அந்த புத்தகத்தில் வெளியிடப்படும் கருத்துக்களால் தங்களின் தொழிலும் குடும்ப வாழ்க்கையும் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இளவரசர் ஹாரி தனக்கு நெருங்கிய தோழர்கள் என்றும் தனக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று பள்ளி மற்றும் கல்லூரி காலங்களிலேயே கூறியிருக்கிறார். இதனால், அவர்களின் நட்பு வட்டத்திற்குள் நடக்கும் எந்த ஒரு நிகழ்வுகளும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் இருள் சூழ்ந்து காணப்பட்ட நகர்.. கடும் வெள்ளப்பெருக்கால் மக்கள் அவதி..!!

பிரிட்டனில் பெருவெள்ளம் உருவாகி லிவர்பூல் நகரில் இருள் சூழ்ந்ததால், அங்குள்ள மக்களை வெளியேற்றியுள்ளனர். பிரிட்டனில் பெருவெள்ளம் ஏற்பட்டதால் சாலையில் பள்ளம் உருவாகி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே அதை சரி செய்யும் பணியை இரவு நேரத்தில் பணியாளர்கள் மேற்கொண்டனர். எனவே மக்களை அவரவர் வீடுகளிலிருந்து வெளியேற்றினர். மேலும் பள்ளம் ஏற்பட்ட பகுதிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. வெள்ளத்தினால் பல வீடுகள் சேதமடைந்திருக்கிறது. இதற்கிடையில் நள்ளிரவு நேரத்தில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே மக்கள் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை சரியில்லை.. எச்சரிக்கும் BMA..!!

பிரிட்டிஷ் மருத்துவ சங்கம், பிரிட்டன் அரசின் நடவடிக்கையை கண்டித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரிட்டன் அரசு, 16 துறைகளைச் சேர்ந்த பணியாளர்களுக்கு தனிமைப்படுத்துதலில் தளர்வு அறிவித்திருக்கிறது. இதனை BMA எதிர்த்துள்ளது. BMA கவுன்சிலின் தலைவரான டாக்டர் சாந்த் நாக்பால் தெரிவித்துள்ளதாவது, அரசு தற்போது மேற்கொள்ளும் கொரோனா கட்டுப்பாடுகளின் திட்டம், நாட்டில் தொற்று அதிகரிக்க காரணமாகிறது. ஒரே திட்டத்தை செயல்படுத்துவதை காட்டிலும் விரைவில் அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அரசு விழிக்க வேண்டும். அரசு தேவையான நடவடிக்கைகளை […]

Categories
உலக செய்திகள்

“இளவரசர் ஹாரி-மேகனை நீதிமன்றம் வரவைப்பேன்!”.. மேகன் தந்தை ஆவேசம்..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் மேகனை விரைவில் நீதிமன்றம் வரவழைப்பேன் என்று மேகனின் தந்தை ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மனைவி மேகனின் தந்தை, தாமஸ் பிரபல பத்திரிகை ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அப்போது அவர், சீக்கிரத்தில் என் மகள் மற்றும் அவரின் கணவர் ஹாரியை நீதிமன்றத்திற்கு வரவழைப்பேன் என்று கூறினார். அதாவது ஹாரி மற்றும் மேகன் திருமணம் நடைபெற்றபோது, தந்தையுடன் மேகனுக்கு பிரச்சனை உண்டானது. எனவே அவர்களின் திருமணத்தில் மேகனின் தந்தை கலந்துகொள்ளவில்லை. […]

Categories
உலக செய்திகள்

பணத்தை வாங்கிக்கொண்டு மீண்டும் அத்துமீறும் பிரான்ஸ்.. வெளியான வீடியோ..!!

பிரிட்டன் அரசிடம் பணத்தை பெற்றுக்கொண்ட பின்பும், பிரான்ஸ் எல்லை பாதுகாப்பு படையினர் புலம்பெயரும் மக்களை நாட்டிற்குள் விட்டுச்செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அரசு தங்கள் நாட்டிற்குள் பிரான்சிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் சட்டவிரோதமாக வருவதை தடுக்க அந்நாட்டின் எல்லை பாதுகாப்பு படையினருக்கு 54 பில்லியன் பவுண்டுகள் கொடுத்திருக்கிறது. அதன் பின்பும் பிரான்ஸின் கடற்படையினர் புலம்பெயர்ந்த மக்களை பிரிட்டன் எல்லைக்குள் கொண்டு வந்து விட்டுச்செல்வதாக தெரிய வந்துள்ளது. பிரபல பத்திரிக்கை நிறுவனம், இக்காட்சியை வீடியோ எடுத்திருக்கிறது. அதில், ஒரு பத்திரிகையாளர், பிரான்ஸ் […]

Categories
உலக செய்திகள்

உலகின் பாரம்பரிய பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நகர்.. எதற்காக..? வெளியான காரணம்..!!

பிரிட்டனிலுள்ள லிவர்பூல் நகர் யுனெஸ்கோவின் உலகின் பாரம்பரியமான தளங்களின்  பட்டியலில் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன நாட்டில் வாக்கெடுப்பு நடத்திய பின்பு யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவினர் இவ்வாறு அறிவித்துள்ளார்கள். இந்த குழுவினர் இது குறித்து கூறுகையில், லிவர்பூல் நகரில் கால்பந்து மைதானம் போன்ற பல புதிய கட்டிடங்கள் பாரம்பரியத்தை குறைப்பதால் பட்டியலில் நீக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்கள். கடந்த 2014 ஆம் வருடத்தில் லிவர்பூல் உலகின் பாரம்பரிய தளம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லிவர்பூல், உலகத்தின் பாரம்பரியப்பட்டியலில் […]

Categories
உலக செய்திகள்

“சர்வதேச கடல் எல்லையில் போர்க்கப்பல்கள் நிறுத்தப்படும்!”.. – பிரிட்டன் அறிவிப்பு..!!

பிரிட்டன் அரசு ஆசிய-பசிபிக் சர்வதேச கடல் எல்லையில் போர்க்கப்பல்கள் இரண்டை நிரந்தர நிறுத்தம் செய்வதாக அறிவித்திருக்கிறது. பிரிட்டனின் குயின் எலிசபெத் என்ற பெரிதான போர்க்கப்பல் வரும் செப்டம்பர் மாதத்தில் ஜப்பான் நாட்டிற்கு அனுப்பப்படவுள்ளது. இதனையடுத்து இரண்டு நாடுகளும் ஒன்றிணைந்து பயிற்சி மேற்கொள்ளவுள்ளது. மேலும் இந்த வருட கடைசியில் கூடுதலாக இரண்டு போர்க்கப்பல் ஜப்பான் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டும் ஆசியா-பசிபிக் சர்வதேச கடல் எல்லையில் எப்போதும் நிரந்தரமாக நிற்கும் என்று டோக்கியோவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் […]

Categories
உலக செய்திகள்

“இதுக்கு ஒரு முடிவே கிடையாதா!”.. நொந்து போன பிரிட்டன் பணம் கொடுக்க முடிவு..!!

பிரிட்டன் நாட்டிற்குள் புலம்பெயர்ந்த மக்கள் அதிகமானோர் ஆங்கில கால்வாயை தாண்டி  வருவதை தடுக்க பிரெஞ்சு எல்லை அதிகாரிகளுக்கு அதிக பணம் வழங்க பிரிட்டன் அரசு தீர்மானித்திருக்கிறது. பிரிட்டனில் இந்த ஆண்டில் மட்டும் தற்போது வரை 8452 புலம்பெயர்ந்த மக்கள், ஆங்கில கால்வாயை தாண்டி நாட்டிற்குள் நுழைந்து விட்டார்கள். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 430 நபர்கள் ஒரு படகில் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் கடல் எல்லைக்குள் வந்துள்ளார்கள். https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/20/7508350332734359381/640x360_MP4_7508350332734359381.mp4 எனவே இதற்கு ஒரு முடிவு கட்ட […]

Categories
உலக செய்திகள்

“மகாராணியாரின் சாதனையை கெடுக்கும்!”.. இளவரசர் ஹாரியால் மற்றொரு பெரும் பிரச்சனை..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி மகாராணியாரை அவமரியாதை செய்யப்போவதாக அரச குடும்பத்தினர் வருத்தத்தில் உள்ளார்கள். இளவரசர் ஹாரி தன் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் ஓபரா வின்ஃப்ரேக்கு  அளித்த நேர்காணலில் ஹாரியின் மகன் ஆர்ச்சியின் நிறம் குறித்து அரச குடும்பத்தில் ஒருவர் விமர்சித்ததாக தெரிவித்திருந்தனர். அது யார்? என்ற தகவலை இந்த புத்தகத்தில் வெளிப்படுத்தியிருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அரச குடும்பத்தினரை பற்றிய பல சர்ச்சைக்குரிய தகவல்கள் அதில் இடம்பெற்றிருக்கும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஹாரி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டனில் நடக்கும் அத்துமீறல்.. பத்திரிகையாளர்கள் முன்பே நுழையும் புலம்பெயர்ந்தோர்..!!

பிரிட்டன் நாட்டின் கடல் எல்லைக்குள் பிரான்ஸ் போர்க்கப்பல்கள் புலம்பெயர்ந்த மக்களை விட்டுச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் உள்துறை செயலாளரான ப்ரீத்தி பட்டேல் கடுமையான பல நடவடிக்கைகளை மேற்கொண்டும் புலம்பெயரும் மக்கள் ஆங்கில கால்வாயை கடந்து வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். நேற்று ஒரே நாளில் சுமார் 430 நபர்கள் பிரிட்டன் வந்திருக்கிறார்கள். இந்நிலையில் இன்று காலை நேரம் பிரிட்டன் நாட்டின் பத்திரிக்கையாளர்கள் முன்பே பிரான்ஸ் போர்க்கப்பல், ஒரு ரப்பர் படகில் 13 நபர்களை ஏற்றி வந்து பிரிட்டன் கடல் […]

Categories
உலக செய்திகள்

“வெள்ளம் வரப்போவதை முன்பே கணித்திருக்கலாம்!”.. பிரிட்டன் பெருவெள்ள நிபுணர் வெளியிட்ட தகவல்..!!

ஜெர்மனில் 160 க்கும் அதிகமானோர் உயிரிழக்க காரணமான வெள்ளம் தொடர்பில் முன்பே கணித்திருக்கலாம் என்று பிரிட்டன் பெருவெள்ள நிபுணர் தெரிவித்திருக்கிறார். ரீடிங் பல்கலைக்கழகத்தின் உயிரியல் துறை பேராசிரியராக இருக்கும் Hannah Cloke, தான் இதை, முன்பே கணித்திருப்பேன் என்கிறார். மேலும் எச்சரிக்கை தகவல் மக்களிடம் தெரிவிக்கப்படுவதில் தவறு ஏற்பட்டிருக்கிறது. மேலும் மக்கள் தங்களுக்கு இவ்வளவு பெரிய  ஆபத்து ஏற்படும் என்று புரிந்திருக்கவில்லை. இது மாதிரியான சம்பவங்கள் மீண்டும் ஏற்படாமல் இருக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று […]

Categories
உலக செய்திகள்

“இதெல்லாம் ரொம்ப ஓவர்!”.. பிரிட்டனை சாடிய பிரான்ஸ் அமைச்சர்..!!

பிரான்ஸ் அமைச்சர் இரண்டு தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களையும் தனிமைப்படுத்துவது ரொம்ப ஓவர் என்று பிரிட்டனை குறை கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் செல்லும் பயணிகள் இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி இருந்தாலும் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இது தொடர்பில் பிரான்ஸ் அமைச்சர் Clement Beaune என்பவர் கூறுகையில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் பிரான்ஸ் நாட்டிலிருந்து பிரிட்டன் சென்றால் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். “இது டூ மச்” என்று கூறியுள்ளார். மேலும் பிரிட்டன், பீட்டா வைரஸ் பிரான்சில் பரவியதால் தான் இந்த முடிவை எடுத்ததாக தெரிவிக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரியின் வாழ்க்கை கதை.. புத்தகம் வெளியிட விநியோகம்..!!

பிரிட்டன் இளவரசர் ஹாரி, தன் வாழ்க்கை கதையை ரகசியமாக புத்தகம் எழுதிய நிலையில், அதனை வெளியிடப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் இளவரசர் ஹாரி அரச குடும்பத்தை எதிர்த்து ஏதாவது ஒன்றை செய்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வகையில் தற்போது தன் வாழ்க்கையில் நடந்தவற்றை புத்தகமாக எழுதியிருக்கிறார். இதனை வரும் 2022 ஆம் வருட கடைசியில் வெளியிடயிருக்கிறார். ஒரு விநியோகஸ்தரிடம் நல்ல விலைக்கு விற்பனையும் செய்துவிட்டார். அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒரு நபர், தன் வாழ்க்கை பற்றிய […]

Categories
உலக செய்திகள்

இளைஞர்களை எச்சரித்த பிரதமர்.. என்ன சொன்னார்..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் இளைஞர்கள் தடுப்பூசி செலுத்தவில்லையெனில் கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டுவரப்படும் என்று எச்சரித்திருக்கிறார். பிரிட்டனில் சுகாதாரத்துறை அமைச்சர் சாஜித் ஜாவித்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. எனவே பிரதமரும் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். தற்போது அவர் தன் வீட்டில் தனிமையில் இருந்தவாறு பத்திரிகையாளர்களை நேரலையில் சந்தித்தார். அப்போது நாட்டில் தடுப்பூசி செலுத்த தகுதியுடையவர்கள் தடுப்பூசி செலுத்தவேண்டும். முக்கியமாக இளைஞர்கள் தடுப்பூசியை எதிர்க்கிறார்கள். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத  இளைஞர்கள் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள […]

Categories
உலக செய்திகள்

சாலையில் நடந்த கொடூர விபத்து.. மொபைலில் வீடியோ எடுத்த ஓட்டுநர்கள் மீது வழக்கு..!!

பிரிட்டனில் சாலை ஒன்றில் கொடூர விபத்து நடந்ததை மொபைலில் வீடியோ எடுத்த ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் M6 என்ற மிக பெரிய சாலையில், கடந்த 8 ஆம் தேதி அன்று மூன்று லாரிகள் ஒன்றின் மீது ஒன்றாக மோதி கொடூர விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு நபர் உயிரிழந்தார். இந்த கோர விபத்தின் காரணமாக இச்சாலையின் தெற்கு பகுதி சுமார் 17 மணி நேரங்களுக்கு அடைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த கொடூர விபத்தை, அந்த […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் அறிவிப்பை எதிர்க்கும் நிபுணர்கள்.. வெளியான தகவல்..!!

பிரிட்டனில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பிரதமரின் முடிவிற்கு நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். பிரிட்டனில் வரும் 19ம் தேதியில் இருந்து கொரோனா விதிமுறைகள் அனைத்தும் அகற்றப்பட உள்ளது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்திருந்தார். எனவே மீண்டும் மக்கள் பழைய நிலைக்கு திரும்பவுள்ளார்கள். எனினும் மருத்துவ நிபுணர்கள் பிரதமரின் இந்த அறிவிப்பை எதிர்க்கிறார்கள். நாட்டில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பும் நிலை ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள். அனைத்துக் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டால் மீண்டும் கொரோனா […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்தப்போவதாக பிரதமர் அறிவிப்பு.. என்ன காரணம்..? வெளியான தகவல்..!!

பிரிட்டன் பிரதமரான, போரிஸ் ஜான்சன் தனிமைப்படுத்தபோவதாக தெரிவித்திருக்கிறார். பிரிட்டனில் தற்போது டெல்டா வகை தொற்று பரவி வருகிறது. எனவே தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சரான, சாஜித் ஜாவித் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நேற்று தெரிவித்திருந்தார். எனவே பிரதமர் போரிஸ் ஜான்சனும், நிதியமைச்சர் ரிஷி சுனக் இருவரும் தாங்கள் தனிமைப்படுத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்கள். இது தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பிரதமரையும், நிதியமைச்சரையும் […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் சுகாதார செயலர் கூறிய தகவல்.. அமைச்சரவையில் உண்டான சிக்கல்..!!

பிரிட்டனில் சுகாதார செயலாளரான சஜித் ஜாவித்திற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அமைச்சரவையில் இருக்கும் முக்கால்வாசி பேர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர். பிரிட்டனில் சஜித் ஜாவித்(51) புதிய சுகாதார செயலாளராக சில நாட்களுக்கு முன்பு தான் பதவியேற்றார். இந்நிலையில் அவர் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறார். மேலும் இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தி கொண்டதனால் சிறிய அறிகுறிகள் தான் தனக்கு ஏற்பட்டிருப்பதாக கூறினார். எனவே அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள் குறித்த தகவல் கண்டறியப்பட்டது. அதன்பின்பு அவர்களிடம் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. அதாவது […]

Categories
உலக செய்திகள்

அச்சத்தில் பிரிட்டன் மக்கள் …. அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை ….!!!

பிரிட்டனில் தற்போது காய்ச்சல் பரவி வருவதால் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகள் வழங்க அந்த நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா  வைரஸ் தொற்று பரவலை தொடர்ந்து இன்ஃப்ளூயன்ஸா நோய் பரவி வருகிறது. தற்போது பிரிட்டனில் குளிர்காலம் என்பதால் காய்ச்சலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசிகளை இலவசமாக வழங்கப்பட உள்ளது. கடந்த குளிர்காலத்தின் போது அங்கு 19 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. இதனால் இம்முறை இதைவிட 35 மில்லியன் அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு சாதனை படைக்கும் என்று […]

Categories
உலக செய்திகள்

“நல்லதுக்கு காலமில்லை!”.. புறாவுக்கு இரை வைத்தது குற்றமா..? இந்திய மாணவருக்கு நேர்ந்த நிலை..!!

மான்செஸ்டரில் புறாவுக்கு இரை வைத்த மாணவருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சால்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பயிலும் கேரளாவை சேர்ந்த மாணவர் ரிஷி பிரேம். இவர்  Piccadilly பூங்காவிற்கு சென்றுள்ளார். அப்போது இவரின் அருகில் புறாக்கள் வந்து அமர்ந்திருக்கிறது. எனவே தான் வைத்திருந்த உணவில் பாதியை புறாக்களுக்கு இரையாக போட்டுள்ளார். அதில் சில நடைபாதையில் விழுந்திருக்கிறது. இதைப்பார்த்த அமலாக்க அதிகாரி, குப்பைகளை நடைபாதையில் கொட்டியதாக மாணவர் ரிஷிக்கு 150 பவுண்டுகள் அபராதம் விதித்துவிட்டார். எனவே ரிஷி, இந்திய நாட்டில், […]

Categories
உலக செய்திகள்

அவர அடிக்காதீங்க சார் ப்ளீஸ் …. கண்மூடித்தனமாக தாக்கும் போலீசார் …. வெளியான வீடியோ ….!!!

 போலீஸ் அதிகாரி ஒருவர் கருப்பினத்தவரை கண்மூடித்தனமாக தாக்கிய  வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் Newport பகுதில் உள்ள குடியிருப்புக்கு பின்னால் இருக்கும் ஒரு தோட்டத்தில் கடந்த     9-ம் தேதி  41 வயது மதிக்கத்தக்க கறுப்பினத்தவர் ஒருவரை  போலீசார் கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்துள்ளார் . இந்த வீடியோவை எடுத்துக்கொண்டே அந்த பெண் அவரை விட்டுவிடுங்கள் என்னுடைய குழந்தைகள் பயப்படுகிறார்கள் என்று போலீசாரிடம் கெஞ்சுகிறார். மேலும் […]

Categories
உலக செய்திகள்

சிவப்பு பட்டியலில் இணைக்கப்படுமா பிரான்ஸ்..? பிரிட்டன் அரசு ஆலோசனை..!!

பிரிட்டன் அமைச்சர்கள் இணைந்து பிரான்சை சிவப்புப் பட்டியலில் சேர்க்க ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் அமைச்சர்கள் பீட்டா கொரனோ வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பிரான்சை சிவப்புப் பட்டியலில் இணைப்பது தொடர்பில் ஆலோசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பிரிட்டன் அரசு மிகவும் அதிக விதிமுறைகளை கடைபிடிக்கும் நாடுகளை சிவப்புப் பட்டியலில் வைத்திருக்கிறது. அந்த நாடுகளுக்கு செல்லும் பிரிட்டன் மக்கள் நாடு திரும்பியவுடன் அரசு நியமித்திருக்கும் ஓட்டலில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தற்போது பிரிட்டனின் மிக ஆபத்தான […]

Categories
உலக செய்திகள்

5 லட்சம் மக்களுக்கு வந்த எச்சரிக்கை.. பிரிட்டன் அரசின் உத்தரவு..!!

இங்கிலாந்திலும், வேல்சிலும் வசிக்கும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உடனடியாக தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, நாட்டுமக்கள் NHS கொரோனா செயலியை பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில், ஜூலை 7 ஆம் தேதி வரை ஏழே நாட்களில் சுமார் 530,126 நபர்களுக்கு இச்செயலியிலிருந்து, தனிமைப்படுத்த எச்சரிக்கை தகவல் வந்திருக்கிறது. இதில் இங்கிலாந்து மக்கள் 520,194 பேர், வேல்ஸில் வசிக்கும் மக்கள் 9,932 நபர்களுக்கும் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு எச்சரிக்கை சென்றது. இதனால் தொழில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக பல்வேறு […]

Categories
உலக செய்திகள்

பிரியங்கா சோப்ராவை வறுத்தெடுத்த பிரிட்டன் மக்கள்.. அப்படி என்ன செய்தார்..? வெளியான வீடியோ..!!

பிரிட்டனில், இளவரசர் வில்லியம்-கேட் தம்பதியை இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா  அவமரியாதை செய்ததாக அரச குடும்பத்தின் ரசிகர்கள் கொதிப்படைந்துள்ளார்கள். கடந்த சனிக்கிழமை அன்று விம்பிள்டன் மைதானத்தில் மகளிர் ஒற்றையர் ஆட்டம் நடந்தது. எனவே இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி ஆட்டத்தை காண வந்திருந்தார்கள். அவர்கள், முக்கியமான நபர்கள் அமரக்கூடிய இடத்திற்கு வந்தார்கள். எனவே அங்கு அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் தம்பதியை வரவேற்றார்கள். https://videos.dailymail.co.uk/video/mol/2021/07/14/1669916605914659728/640x360_MP4_1669916605914659728.mp4 ஆனால் அங்கு அமர்ந்திருந்த இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா மட்டும் அவர்களை பார்க்காமல் வேறு பக்கமாக […]

Categories
உலக செய்திகள்

ஜூலை 19-ல் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கம்.. ஆனாலும் இது அவசியம்.. லண்டன் அறிவிப்பு..!!

லண்டனில் நாட்டுமக்கள் ஜூலை 19ஆம் தேதிக்கு பின்பும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகவுள்ளது. லண்டனில் வரும் 19 ஆம் தேதியிலிருந்து கொரோனா தொடர்பான அனைத்து விதிமுறைகளும் நீக்கப்பட உள்ளது. அதன் பின்பும் பொது போக்குவரத்து சேவைகளின் போது, மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று லண்டன் மேயர் சாதிக்கான் TFL நிறுவனத்திடம்  கேட்டிருக்கிறார். அவர், பணியாளர்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை உறுதிப்படுத்துமாறும் TFL நிறுவனத்திடம் கோரிக்கை வைத்திருக்கிறார். இதில் […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் செல்லும் பிரிட்டன் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு.. வெளியான தகவல்..!!

பிரான்ஸ் நாட்டிற்கு பிரிட்டனிலிருந்து வரும் மக்கள் 24 மணி நேரத்திற்குள்ளாக கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டனில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. எனவே பிரிட்டன் அரசு அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் பிரிட்டன் மக்கள்  பிரான்ஸ் நாட்டிற்கு வரும்போது 24 மணி நேரத்திற்குள்ளாக PCR சோதனை செய்து அதில் தொற்று இல்லை என்று முடிவுகளை காட்டவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Parmi les pays […]

Categories
உலக செய்திகள்

கிடைத்தது சுதந்திரம்…. பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு…. குஷியான பிரித்தானியர்கள்….!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஜூலை 19 முதல் முழு ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்படும் என்பதை அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை தொடர்ந்து பிரிட்டனின் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதால் மக்களும், அரசு அதிகாரிகளும் தளர்வுகளை நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஜூலை 19 […]

Categories
உலக செய்திகள்

15000 அடி உயரத்திலிருந்து வீட்டின் கூரையில் விழுந்த வீரர்.. என்ன நடந்தது..? அதிர்ச்சி சம்பவம்..!!

பிரிட்டன் ராணுவ வீரர் பயிற்சி மேற்கொண்டிருந்த போது விமானத்திருந்து குதித்து ஒரு குடியிருப்பின் கூரையை உடைத்துக்கொண்டு சமயலறையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டன் ராணுவ வீரர் பயிற்சி மேற்கொண்டிருந்த சமயத்தில் திடீரென்று பேராஷூட் திறக்கவில்லை. எனவே சுமார் 15,000 அடி உயரத்திலிருந்து குதித்து விட்டார். வழக்கமாக பகை நாட்டு பிராந்தியங்களில் ரகசியமாக ஊடுருவ ராணுவ வீரர்கள் இத்திட்டத்தை கையாள்வார்கள். எனினும் இவர் பேராஷூட் திறக்காததால் மாட்டிக்கொண்டார். எனவே கலிபோர்னியாவில் இருக்கும் Atascadero என்ற பகுதியில் இருக்கும் […]

Categories
உலக செய்திகள்

இத்தாலி தான் வெற்றி பெறும்…. போட்டிக்கு முன் கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்…. சர்ச்சையை ஏற்படுத்தி வரும் கருத்து….!!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் யூரோ கால்பந்து போட்டியில் இத்தாலிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தலைவர் Ursula von der Leyen கடந்த வெள்ளிக்கிழமை யூரோ கால்பந்து போட்டியில் இத்தாலி வெற்றி பெற வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். இதனிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தாலி மற்றும் இங்கிலாந்து இடையிலான நடந்து முடிந்த இறுதிப்போட்டியில் இத்தாலி  3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது கோப்பையை கைப்பற்றியது .இந்த வெற்றி பிரிட்டன் மக்களிடையே பெரும் […]

Categories
உலக செய்திகள்

முழுமையான ஊரடங்கு தளர்வுகள்…. தடுப்பூசிகள் செலுத்தும் காலத்தில் புதிய திட்டம்…. நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பிரபல நாடு….!!

முதல் டோஸ் தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும் இடையிலான நேரத்தை பாதியாக குறைக்கும் நடவடிக்கைகளை பிரிட்டன் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பிரிட்டனின் வரும் ஜூலை 19ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்படவுள்ளதால் மக்களும், அரசு அதிகாரிகளும் தளர்வுகளை நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர். மேலும் ஜூலை 19 […]

Categories
உலக செய்திகள்

“இந்த விதி விரைவில் வரும்!”.. பிரிட்டன் அரசு வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டனில் கொரோனாவின் நான்காம் அலையை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கொரோனா அதிகம் பரவியதால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. எனவே இன்னும் சிறிது நாட்களில் கொரோனா விதிமுறைகளும் தளர்த்தப்படும் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கொரோனாவின் நான்காம் அலையில் மாட்டாமல் இருப்பதற்கு கொரோனா சான்றிதழ் வைத்திருப்பவர்கள் மட்டுமே உணவகங்கள், பப்புகளுக்கு  செல்ல முடியும் என்ற திட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இதனால் அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வருவார்கள். எனவே அரசின் இலக்கை அடைய […]

Categories
உலக செய்திகள்

கொரோனா பாஸ் கட்டாயம்.. பிரிட்டன் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

பிரிட்டனில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத பகுதிகளுக்கு கொரோனா பாஸ் கட்டாயம் என்று அரசு அறிவித்திருக்கிறது. பிரிட்டனில் நான்காம் அலையை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், அதிகமான மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்துவார்கள். மேலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். எனவே கொரோனாவின் நான்காம் அலையை தடுக்க பார்கள், உணவகங்கள் மற்றும் பப்களுக்குள் செல்வதற்கு பிரிட்டன் மக்கள் கொரோனா சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இதனால் […]

Categories
உலக செய்திகள்

தலையின்றி கிடந்த பெண்ணின் சடலம்.. கைதான மற்றொரு பெண்.. அதிர்ச்சி சம்பவம்..!!

பிரிட்டனில் ஒரு பெண்ணின் உடல், தலை இல்லாமல் கண்டறியப்பட்ட வழக்கில் காவல்துறையினர் ஒரு பெண்ணை கைது செய்துள்ளனர். பிரிட்டனில் உள்ள வெம்ப்லியில் இருக்கும் ஒரு குடியிருப்பிலிருந்து கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதியன்று Mee Kuen Chong என்ற 67 வயது பெண்மணி காணாமல் போனார். அதன்பின்பு 2 வாரங்கள் கழித்து, 220 மைல்கள் தூரத்தில் இருக்கும் டெவன் பகுதியின் சுற்றுலா தளத்தில் அவரின் சடலம் தலையின்றி கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். […]

Categories
உலக செய்திகள்

தனிமைப்படுத்துதலில் தப்பிக்க தம்பதி செய்த செயல்.. இறுதியில் நேர்ந்த நிலை..!!

பிரிட்டனில் ஒரு தம்பதி தனிமைப்படுத்துதலிலிருந்து தப்புவதற்கு 6 ஆயிரம் பவுண்டுகள் செலவு செய்து ஏழு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த  Ivan மற்றும் Jayne Hutchings என்ற தம்பதியர் தென்னாப்பிரிக்கா சென்றுள்ளனர். அங்கு ஹோட்டலில் தனிமைப்படுத்துதலிலிருந்து தப்புவதற்காக சுமார் 7 நாடுகளுக்கு பயணித்து அதன்பின்பு நாடு சென்றுள்ளனர். இதனால் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அம்பர் பட்டியலில் சேர்க்கப்பட்ட Frankfurt வழியே இவர்கள் பிரிட்டன் திரும்பியுள்ளனர். அங்கு 10 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் கோபமடைந்த Ivan […]

Categories
உலக செய்திகள்

இன்னும் சில நாட்கள்.. கொரோனா குறைந்துவிடும்.. வெளியான நல்ல தகவல்..!!

பிரிட்டனில் கொரோனா தொற்று சில வாரங்களில் குறைந்து விடும் என்று நாட்டின் அறிவியல் ஆலோசகர்கள் கூறியுள்ளார்கள். இங்கிலாந்தின் கால்பந்து போட்டியின் வெற்றிக்குபின் கொரோனா அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று சில ஆவணங்களில் நல்ல தகவல் கிடைத்திருக்கிறது. பருவநிலை மாற்றம், தடுப்பூசிகள், இயற்கையாக உள்ள நோய் எதிர்ப்பு சக்தி, போன்றவற்றினால் கொரோனா சமநிலையை அடையும். அதன் பின்பு சில வாரங்களில் பரவல் குறையும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள். எனினும், இது எப்போது நடக்கும் என்று சரியாக […]

Categories
உலக செய்திகள்

ஜப்பானில் ஆசிரியை சடலமாக மீட்பு.. மர்மமாக உயிரிழப்பு..!!

ஜப்பானில் மாயமான பிரிட்டன் பெண் ஆசிரியையின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டில் நாட்டிங்ஹாம் பகுதியில் வசித்த ஆலிஸ் ஹோட்கின்சன் என்ற 28 வயது பெண் டோக்கியோவில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தார். எனவே Kanagawa என்ற பகுதியில் தங்கி, பணிக்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் 2 நாட்களாக அவர் பணிக்கு வராததால் ஜூலை 1ஆம் தேதி என்று அவரின் மேலாளரால் மாயமானார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பின்பு, காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே கடந்த ஒரு வாரமாக அவரை காவல்துறையினர் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்த வலியுறுத்தும் நகரம்.. கொரோனா பரிசோதனை கட்டாயம்.. வெளியான தகவல்..!!

ஆக்ஸ்போர்ட் நகரத்தில் வசிக்கும் மக்கள் பயணங்களை குறைக்க வேண்டும் என்றும் 30 வயதிற்கு குறைந்த மக்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு நகரத்தில் தற்போது கொரோனா அதிகமாக பரவி வருகிறது. இதனால் திங்கட்கிழமையில் இருந்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நகர நிர்வாகம் தீர்மானித்துள்ளது. மேலும் தற்போது வரை, தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் தடுப்பூசி செலுத்த  அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நகரம் மட்டுமல்லாமல், வடமேற்கு, பர்மிங்காம் மற்றும் பெட்ஃபோர்ட் போன்ற நகரங்களிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுகாதார […]

Categories
உலக செய்திகள்

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்.. வீடு திரும்பிய பெண்ணை கடத்தி நாசம் செய்த அதிகாரி..!!

பிரிட்டனில் ஒரு இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவல்துறை அதிகாரி கைதான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் வசிக்கும் 33 வயது பெண் Sarah Everard. இவர் கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி அன்று தன் குடியிருப்புக்கு சென்ற போது திடீரென்று காணாமல் போனார். அதன் பின்பு வன பகுதியில், அவரின் உடல் கண்டறியப்பட்டது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகள்  வைத்து Wayne Couzens என்ற காவல் அதிகாரி மீது சந்தேகம் […]

Categories
Uncategorized உலக செய்திகள்

பிரதமரே விதியை மீறலாமா?…. கேள்வி எழுப்பிவரும் எதிர்தரப்பினர்….!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விதியை மீறி நடந்ததாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கடந்த 2019 கிறிஸ்மஸ் பண்டிகையை Mustique என்ற பகுதியில் தனது மனைவி குழந்தைகளுடன் சிறப்பாக கொண்டாடினார். இதனிடையே கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் தங்களுடைய ஆடம்பரச் செலவுகளுக்காக கட்சி நிதியை எடுத்து செலவிடக் கூடாது என்று கூறி சட்டம் பிறப்பித்தார். இந்நிலையில் தற்போது பிரதமர் தன்னுடைய சொந்த செலவுகளுக்காக கட்சி நிதியை பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சியினர் எழுப்பியுள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

“இளவரசருக்கு, மகாராணியின் ரகசிய வாக்குறுதி!”.. என்ன சொன்னார் தெரியுமா..?

பிரிட்டன் இளவரசர் பிலிப்பின் மரணத்திற்கு முன்பு, அவருக்கு மகாராணியார் ரகசிய வாக்குறுதி  மற்றும் சத்தியம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் இளவரசர் பிலிப் கடந்த ஏப்ரல் மாதத்தில் 9-ம் தேதி அன்று காலமானார். அவரது இறுதிச் சடங்கில் மகாராணியார் வருத்தத்துடன் தனியாக அமர்ந்திருந்தது, நாட்டு மக்கள் அனைவரின் மனதையும் நொறுக்கியது. எனினும் மகாராணியார் இளவரசர் மரணமடைந்த நான்கு நாட்களில் தன் கடமைகளை தொடங்கினார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது. அதாவது இளவரசரின் இழப்பில் இருந்து மகாராணி மீண்டு வர குறைந்தபட்சம் […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு கட்டுப்பாடுகளில் தளர்வு.. பிரிட்டன் அரசு வெளியிட்ட தகவல்..!!

பிரிட்டன் அரசு தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகள் அறிவிக்கவுள்ளது. பிரிட்டனில் வரும் 19ம் தேதியிலிருந்து கொரோனா கட்டுப்பாடுகளிலிருந்து தளர்வுகள் அறிவிக்கப்படவிருக்கிறது. நாட்டில் மூன்றாவது தடவையாக படிப்படியாக தளர்வுகள் கொண்டுவரப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டன் போக்குவரத்து துறை அமைச்சரான கிராண்ட் ஷாப்ஸ், சுற்றுலா பயணிகளுக்கு விதிமுறைகளில் சில விலக்குகள் அளிக்கப்படவிருப்பதாக கூறியிருக்கிறார். இது மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு சற்று குறைவாக இருக்கும் நாடுகளின் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி முழுமையாக செலுத்தியிருந்தால் தனிமைப்படுத்துதல் போன்ற விதிமுறைகளில் […]

Categories
உலக செய்திகள்

வட அயர்லாந்தில் வசிப்பவர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா..? மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை..!!

வடக்கு அயர்லாந்தானது, பிரிட்டனின் ஒரு பகுதியாக இருந்தாலும், அயர்லாந்துடன்  சேர்ந்திருப்பதால் சில மக்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. பிரிட்டனின் ஒரு பகுதியாக வட அயர்லாந்து உள்ளது. ஆனால் நில பரப்பின் அடிப்படையில் அயர்லாந்துடன் சேர்ந்துள்ளது. இதனால் சில மக்கள் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அதாவது, அயர்லாந்தில் பிறந்த மக்கள் வட அயர்லாந்தில் தான் அதிக காலமாக வசித்து வருகிறார்கள். இதனால் பிரிட்டன் பாஸ்போர்ட் கிடைப்பதில் அவர்களுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அதாவது வடஅயர்லாந்தின் முன்னாள் சபாநாயகரான Lord Hay, அயர்லாந்தில் […]

Categories
உலக செய்திகள்

அதிர வைக்கும் தொலைபேசி தகவல்.. அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ப்ரீத்தி பட்டேல்..!!

பிரிட்டன் உள்துறை செயலர் ஒரு தொலைபேசி அழைப்பால், பல அதிரடி நடவடிக்கைகளை கையாள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். பிரிட்டன் உள்துறை செயலரான ப்ரீத்தி பட்டேல் பிரபல தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில், கூறியுள்ளதாவது, கடந்த ஞாயிற்று கிழமை அன்று மாலையில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு அதிர்ச்சி தகவலை கூறினர். அதாவது, பிரான்ஸின் வடக்கு பகுதியில் தாய், தந்தை மற்றும் அவர்களின் 2 பெண் குழந்தைகளை பிரிட்டன் அழைத்து செல்கிறோம் என்று ஏமாற்றி கடத்தல்காரர்கள் […]

Categories
உலக செய்திகள்

இவங்க 2 பேரையும் எப்படியாவது சமாதானப்படுத்தனும் …. மீண்டும் பிரிட்டன் செல்லும் ஹரி …!!!

பிரிட்டன் இளவரசி டயானாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக இளவரசர் ஹரி பிரிட்டனுக்கு சென்ற போது குடும்பத்தினருடன் சமரசம் ஆவதற்கான சரியான வாய்ப்புகள் அமையவில்லை  . பிரிட்டன் இளவரசி டயானாவின் 60-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரை கவுரவிக்கும் வகையில் கென்சிங்டன் மாளிகையில் அவருடைய உருவச்சிலை திறப்பு நிகழ்ச்சி நடந்தது . இதில்  இளவரசியின் உருவ சிலையை அவருடைய இரு மகன்களான இளவரசர்கள் வில்லியம்,ஹரி இணைந்து திறந்து வைத்தனர். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சி […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் தளர்வு.. வெளியான அறிவிப்பு..!!

பிரிட்டன் மக்களுக்கு, ஜெர்மனியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் இந்த வாரத்திலிருந்து தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிரிட்டன் மக்கள் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டால் அவர்கள் புதன்கிழமையிலிருந்து தனிமைப்படுத்துதலின்றி ஜெர்மனிக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்ற பயணிகள் தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்தப்படுவார்கள். எனினும் 5 நாட்கள் கழித்து அவர்களுக்கு பிசிஆர் சோதனை மேற்கொண்டு தொற்று இல்லை என்றால், பத்து நாட்கள் தனிமைப்படுத்துவது குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனின் மஞ்சள் பட்டியலில் ஜெர்மன் இருக்கிறது. எனவே ஜெர்மன் மக்கள் பிரிட்டன் வந்தால்  பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவிற்கு கிடைக்கப்போகும் பெருமை.. கல்பனா சாவ்லாவை தொடர்ந்து மற்றொரு பெண்..!!

இந்தியாவில் பிறந்த பெண், அமெரிக்காவில் பட்டம் பெற்று, தற்போது விண்வெளி பயணம் மேற்கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிட்டன் கோடீஸ்வரரான ரிச்சர்ட் பிரான்சன், விர்ஜின் கேலடிக் என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்தை நிறுவினார். தற்போது இந்நிறுவனமானது, வரும் 11ஆம் தேதியன்று முதல் சோதனை பயணத்தை மேற்கொள்ளவுள்ளது. இதற்காக 5 நபர்கள் கொண்ட குழுவினர்  விண்வெளிக்கு முதன் முதலாக பயணிக்கவுள்ளார்கள். இந்த குழுவில் இந்தியாவை சேர்ந்த சிரிஷா பாண்ட்லா என்ற பெண்ணும் இருக்கிறார். இந்தியாவில் பிறந்து விண்வெளிக்கு பயணம் மேற்கொண்ட […]

Categories
உலக செய்திகள்

சட்டவிரோதமாக நுழைபவர்களுக்கு கடும் தண்டனை.. பிரிட்டன் எச்சரிக்கை..!!

பிரிட்டனுக்குள் சட்டவிரோதமாக புகுந்த புலம்பெயர்ந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளில் உள்ள பல மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் புகுவதற்கு தான் முயன்று வருகிறார்கள். இதனால் சட்டவிரோதமாக மற்றும் கடத்தல்காரர்களை வைத்து நுழைகிறார்கள். அவ்வாறு செல்ல முயலும் சமயத்தில் சிலர் இறக்கின்றனர். இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. Enough is enough. Next week we’ll introduce the Borders Bill to go after these […]

Categories
உலக செய்திகள்

பிரிட்டன் மக்களுக்கு குட் நியூஸ் …. இன்னும் ஒருசில வாரங்களில் …. வெளியான முக்கிய தகவல் ….!!!

பிரிட்டனில் முழுமையாக கொரோனா  தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் இன்னும் சில வாரங்களில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா  தடுப்பூசி இரண்டு டோஸ்  செலுத்தி கொண்டவர்கள் அடுத்த மாதத்திலிருந்து தனிமைப்படுத்துதல் மற்றும் கொரோனா  பரிசோதனை போன்றவற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், விரைவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் வகையான திட்டங்களை அறிமுகப்படுத்த இருப்பதாக […]

Categories
உலக செய்திகள்

ராணுவ சேமிப்புக் கிடங்கில் தீடீர் சோதனை …. போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி ….!!!

ராணுவ  சேமிப்புக் கிடங்கில் சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய கஞ்சா செடிகள் வளர்ப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் Northamptonshire என்ற இடத்தில்  முன்னாள் ராணுவ  சேமிப்பு கிடங்கு ஒன்று அமைந்துள்ளது .இங்கு ராணுவத்தினர் பயன்படுத்தும் ஆயுதங்கள் மற்றும் பீரங்கிகள் போன்ற கருவிகளை பழுது பார்க்கும் இடமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தியபோது சுமார் 1 மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள கஞ்சா செடிகளை வளர்த்து வந்ததை கண்டு […]

Categories

Tech |